Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்
- டி.எஸ்.ஜே.
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 283

23 அக்டோபர் 2006


Astrology paid service
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

பக்த பிரஹலாதா என்ற பெயரிலேயே ஆறு முறை, 1926, 1932, 1934, 1946, 1959, 1967 ஆண்டுகளில் படங்கள் வெளிவந்திருக்கின்றன.

 ***

ஆல்பிரட் ஹிட்ச்காக் ஒரே பெயரில் இரண்டு படங்களைத் தயாரித்தார். படத்தின் பெயர் மேன் ஹ ந்யூ டூ மச்.

***

அதிக அளவில் புராணப் படங்களில் நடித்தவர் யாரென்றால் சிறிதும் யோசிக்காமல் சொல்லி விடலாம். அவர்தான் என். டி. ராமராவ். 44 புராணப்படங்களில் நடித்திருக்கிறார்.

***

1957 ல் மேக்பர் என்ற படம் லண்டனில் வெளிவந்தது. படம் பார்ப்பவர்கள் இன்ஷ்யூர் செய்யப்பட்டார்கள் பயத்தினால் இறந்துவிடலாமென்று!

***

ஹாலிவுட்டையே தன் அழகினால் கலக்கிக் கொண்டிருந்த சோபியா லாரென் பிறக்கும் போது மிக அவலட்சணமாக இருந்தாராம். அவருடைய தாயார் அவருக்கு இதனால் பால் கொடுக்க மறுத்தார்களாம்.

***

1938ம் ஆண்டிலேயே நீச்சல் உடையில் தோன்றிய நடிகை கே. ஆர். செல்லம்தான். வனராஜ கர்ஸன் என்ற படத்தில் இப்படி நடித்தார்.

***

கேதார் ஷர்மா என்ற இயக்குனரிடம் கிளாப் அடிக்கும் பணியாளராகத்தான் பிரபல நடிகர், இயக்குனர் ராஜ்கபூர் ஆரம்பத்தில் வேலை பார்த்தார். ஒருமுறை படப்பிடிப்பின் போது தூங்கி விட்டதற்காக கேதார் ஷர்மா அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டாராம்.

***

1902 ம் ஆண்டிலேயே ஜார்ஜ் மெல்லிஸ் என்பவர் A trip to the moon என்ற படத்தில் அனிமேஷன் காட்சிகளை இடம் பெறச்செய்தார்.

***

பிரபல மலையாள நடிகர் பிரேம் நசீர் நடித்த முதல் படமான தியாக் சீமா வெளிவரவே இல்லை.

***

முதன் முதலாக வெளி நாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் பிரபல சங்கீத வித்வான் வி. வி. சடகோபன் நடித்தநவயுவன் அல்லாது கீதாசாரம். இது லண்டனில் எடுக்கப்பட்டது.

***

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகனும் அவர் மனைவி நான்சியும் இணைந்து நடித்த ஒரே படம் வெஹால் காட்ஸ் ஆப் தெ நேவி.

***

சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்குவது போல் மிக மோசமான படங்களுக்கும் தங்க ராஸ்பெர்ரி விருது (golden Raspberry award) வழங்குகிறார்கள். இது ஜான் வில்ஸன் என்பவரால் 1980ல் துவங்கப்பட்டது.

(அவ்வப்போது ரீல் வரும்)

(டி. எஸ். ஜே யின் தொகுப்பிற்கு உதவியவை: சுவையான சினி துணுக்குகள் (சிவரஞ்சன்), பில்ம் நியூஸ் ஆனந்தனின் சாதனை படைத்த திரைப்பட வரலாறு, இணைய தள செய்திகள்)

*****

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X