Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
சினி மினி
- ஜன்பத்
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 302

05 மார்ச் 2007

7th Sense
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

திருமணமாம், திருமணம்!

நடிகை மாளவிகாவுக்கும் கேரளத்தைச் சேர்ந்த சுமேஷ் என்பவருக்கும் மார்ச் 7ம் தேதி திருமணம். " என் திருமண வாழ்க்கை என் திரை வாழ்க்கையைப் பாதிக்காது,. முகம் சுளிக்கும் காட்சிகளில் இதுவரை நடித்ததில்லை.(ஓ!அப்படியா?) இனிமேலும் நடிக்க மாட்டேன் என்கிறார்" மாளவிகா.

***

'மக்குப்பையா மக்குப்பையா, என்னை மயக்கித் தொலையேண்டா' என்ற மிக இலக்கிய நயம் வாய்ந்த பாடல் இடம் பெறும் படம் அர்ஜுன் தயாரிக்கும் தவம். இதில் மக்குப் பையன் அருண் விஜய், மயக்கச் சொல்லி கேட்கிறவர் நடிகை அர்பிதா!

***

பெரியார் படத்தை வெளியிடுவதற்கு முன் கலைஞருக்குப் போட்டுக் காண்பித்தார்கள். பல காட்சிகள் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. காட்சிகள் முழுமையாக இல்லையென சொல்லிவிட்டதால் மீண்டும் அந்தக் காட்சிகளை எடுக்கிறார்களாம். ( வேறு வழி!)

***

காசு இருக்கணும்

பணம் வாழ்க்கைக்கு அவசியம், ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாக ஆகிவிடாது என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு வரும் திகில் படம் "காசு இருக்கணும்". இதில் இயக்குனர் பாக்கியராஜ் வில்லனாக நடிக்கிறார்.
(படத்திற்கு வசூலும் இருக்கணும்!)

***

விஜயும் அசினும் நடித்து கேரளாவில் சக்கை போடு போட்ட போக்கிரி இப்போது பாலிவுட் போகிறார். சல்மான்கான் தான் கதாநாயகன். சங்கர் தாதா என்ற பெயரில் வரவிருக்குமிந்தப் படத்தில் சங்கர் தாதாவிற்குப் பொருத்தமான தாதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

***

வட்டாரம் படம் மூலம் சினிமாவில் கால் பதித்திருக்கும் அதிசயா இப்போது எல்லா இளம் நடிகர்களுடன் நடிக்க ஆவலாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். முகம் சுளிக்காத அளவிற்கு க்ளாமராக நடிக்கத் தயாராம். (அது என்னது பாலுக்கும் காவல,் பூனைக்கும் தோழன் என்பது மாதிரி)

***

கதை அப்படி

மகாபாரதத்தில் திரெளபதி சபையிலே அவமானப்படுத்தப்பட்டாள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெண் ஆண்களை அவமானப்படுத்துகிறாள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் 'கதை அப்படி' படத்தின் இயக்குனர். (கதை அப்படிப் போவுதா?)

***

ஐந்து ஜோடிகளுடன் நான் அவனில்லை படத்தில் நடிக்கும் மச்சமுள்ள ஜீவன் மச்சக்காரன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதயத்திருடன் படத்தில் நடித்த காம்னாதான் நாயகி.

***

பிக் பிரதர் புகழ் ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமீதா ஷெட்டி இப்போது ராம்கோபால் வர்மா எடுக்கும் லீலை படத்தில் நடிக்கிறார். இவர் ராஜ்ஜியம் படத்தில் நடித்திருக்கிறார் (என்பது தெரிந்ததே). மாதவனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்

***

நண்பனின் காதலி என்ற முழுநீள ஹாஸ்யப் படத்தில் நடிக்கும் விக்ரமாதித்யன் வினுசக்ரவர்த்தியை அடிக்க வேண்டிய ஒரு காட்சியில் நிஜமாகவே பின்னி விட்டார். படப்பிடிப்பு பாதிநாள் நின்றுபோய் சமாதானப்படுத்துவது பெரும் பாடாகிவிட்டதாம். ஒரு கொசுறு செய்தி. இந்தப்படத்தில் "ஒஸ்தாவா , ஒஸ்தாவா, உரசிகொள்ள ஒஸ்தாவா" என்று ஒரு ஒசத்தியான பாட்டு இடம் பெறுகிறது.

*****

           
New Page 1

 மேலும் பல.....  

YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

 
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide