நிழலும் நிஜமும்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில் ஆம் ஆடம்சன் என்ற
புகழ் வாய்ந்த ஹாலிவுட் இயக்குனர் திகில் படங்களை
எடுப்பதே தன் லட்சியம் என்று ஐந்து கல்லறைகள்,
சாத்தானின் கொடுமைகள் போன்ற பேய், கொலைப் படங்களையே
இயக்கி வந்தார். கடைசியில் இவரே காணாமல் போனார். இவரை
யாரோ கொலை செய்து விட்டு அவர் வீட்டுத் தண்ணீர்
தொட்டிக்குள் இவரைப் புதைத்து வைத்திருந்தார்கள்.
***
முதன் முதலில் தமிழில் நீச்சல் உடையில் தோன்றியவர்
கே.ஆர். செல்லம். 1938ம் ஆண்டில் வெளிவந்த வனராஜ
கர்சன் என்ற படத்தில் இப்படித் தோன்றினார்.
***
நவராத்திரியில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில்
நடித்தது பிரபலமாகியது. ஆனால் அதற்கு முன்பே சுலோசனா
என்ற நடிகை பம்பாய் கி பில்லி (பம்பாயின் பூனை) என்ற
படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.
***
1970ம் ஆண்டில் மிகவும் வித்தியாசமான பெயரில்
இங்கிலாந்தில் ஒரு படம் வெளிவந்தது. 48 மணி நேரம்
ஓடிய அந்தப் படத்தின் பெயர் "The
longest, most meaningless movie in the world!"
***
லதா மங்கேஷ்கருக்கு அவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர்
ஹேமா. அவரது தந்தையார் நடத்திய நாடக மன்றத்தில் லதா
நாரதராக அவர் தந்தையுடன் நடித்திருக்கிறார்.
*****