சபாஷ், சரியான
போட்டி என்ற அட்டகாச வில்லன் நடிகராகத்தான் பி.எஸ்.
வீரப்பாவைத் தெரியும். ஆனால் முதன் முதலில் பத்தினித் தெய்வம்
என்ற படத்தில் நல்லவராக நடித்திருக்கிறார். காதல் மன்னன்
ஜெமினி வில்லனாக நடித்திருக்கிறார்.
***
1982ம்
ஆண்டில் காந்தி படத்திற்கு சிறப்பான ஆடைகளைத் தயாரித்துக்
கொடுத்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் பானு அத்தையா என்பவர்.
***
மர்மக்கதை
மன்னர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கிற்கு போலீசைக் கண்டாலே பயமாம்!
***
பிரபல இந்தி
நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரை ஒரு முறை தேர்தலில்
போட்டியிடுமாறு ஒரு காங்கிரஸ் தலைவர் வற்புறுத்தினார். அவர்,
"வேண்டவே வேண்டாம். சட்ட சபையில் முட்டாளாக இருப்பதை விட
திரைப்படங்களில் ஜோக்கராக இருப்பதே மேல்" என்று மறுத்து
விட்டாராம்.
***
கவிஞர் கே.பி.
காமாட்சி என்பவர் மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் வல்லவர். அவர்
எழுதிய சிற்பி செதுக்காத பொற்சிலையே என்ற பாடலில் குற்றம்
கண்டுபிடித்ததற்காக இதன் தயாரிப்பாளர் அந்தப் படத்தை விட்டே
விலக நேர்ந்தது.
***
நமது
திரைப்படங்களில் இடைவேளை என்று போடுவார்கள் அல்லவா? ஜப்பான்
நாட்டுத் திரைப்படங்களில் ரயோமி என்று போடுவார்கள். இந்தச்
சொல்லுக்கு உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அர்த்தமாம்
(தமிழ்ப் படங்களுக்கு "விழித்துக் கொள்ளுங்கள் என்று போடலாமோ?").
நன்றி: சுவையான சினிமாத் துணுக்குகள் (சிவ ரஞ்சன்), ஃபிலிம்
நியூஸ் ஆனந்தனின் தமிழ்த்திரைப்பட வரலாறு முதலியன.
*******