மாயக் கண்ணாடி
எதிர்பார்த்த வெற்றியைத் தராததில் சோர்வடைந்த சேரன், 'பத்திரிகை
சினிமா விமர்சகர்களுக்கு வயசாகிவிட்டது. படத்தைச் சரியாகப்
புரிந்துகொள்ளவில்லை' என்கிறாராம். நல்ல விமர்சனங்கள்
எழுதியபோது மட்டும் நாங்கள் வயதில் இளையவர்களாக இருந்தோமா
என்று சினி விமர்சகர்கள் கேட்கிறார்களாம்.
***
மு.க. ஸ்டாலின் மகன் உதய நிதி தயாரிக்கும் படத்தில்
த்ரிஷாவும் விஜயும் நடிக்கிறார்கள். இதில் ஒரு ஆண்டிஹீரோ (anti-hero)
பாத்திரத்திற்கு ஒரு ஆல் டைம் சூப்பர் ஹீரோவை அணுக
இருக்கிறார்களாமே. அவர்தான் அமிதாப் பச்சன் என்று பட்சி
சொல்கிறது.
***
பெரியார் படத்தில் குஷ்புவின் நடிப்பிற்கு தங்கர் பச்சான்
ஏராளமான பாராட்டு மழையாம். ஒரு சமயத்தில் குஷ்பு நடித்த
பகுதிகளை ஓளிப்பதிவு செய்ய மாட்டேன் என்று குரல் கொடுத்தவர்
இப்போது நேசக்கரம் நீட்டுகிறாரம்.
***
சுந்தர். சிக்கு இப்போது பட வாய்ப்புக்கள் எராளமாம். உதயன்
இயக்கும் படத்தில் அவர் நடிக்க சினேகாவைக் கதாநாயகி
பாத்திரத்திற்குக் கேட்க, நோ என்றுவிட்டாராம். என்ன
பிரச்சனையோ? பத்துக் காரணங்கள் இருந்தாலும் பத்துக்குள்ளே
ஒன்றைச் சொல்லலாமே.
***
சூர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்பது மேகனா
நாயுடுவின் கனவாம். இவர் வீராச்சாமி, சரவணா படங்களில்
நடித்தவர் என்பது தெரிந்ததே!
***
ராடன் டி.வி. தயாரித்து சமுத்திரக்கனி இயக்கும் ஒரு குறும்
படத்தில் சிம்ரன் நடிக்கிறாராம். தவிர மலையாளப் படம் ஹார்ட்
பீட்டிலும் நடிக்கிறார். இது கஜோல் நடிக்க மறுத்த பாத்திரமாம்.
***
பரட்டை படம் கவிழ்த்து விட்ட சோகத்தில் மீரா ஜாஸ்மின்
தற்காலிகமாகத் தெலுங்கில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து ஒரு
தெலுங்குப் பாடத்தில் நடிக்க பை சொல்லி விட்டுப்
போயிருக்கிறாராம். இது ஒரு பாச மலர் அண்ணா தங்கை கதையாம்.
ஆழ்வார் படத்தைத் தயாரித்த மோகன் நடராஜன் தயாரிக்கும்
படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அசின்.
*******