காமிராமேனாகத்
திரைப்பட உலகில் நுழைந்து, ஷங்கருடன் இணைந்து பணியாற்றி
12-பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே என பல
வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் ஜீவா ரஷ்யாவில் தன் தாம்
தூம் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்த போது மாரடைப்பால்
மரணமடந்தார், திரைப்பட உலகம் ஒன்று சேர்ந்து அஞ்சலி
செலுத்துகின்றது. நாமும் அஞ்சலியில் இணைவோம்.
****
ரஜினியின்
சிவாஜியை அண்மையில் பார்த்த அமிதாப் பச்சன் ரஜினிதான்
திரையுலகின் சக்கரவர்த்தி, நான் வெறும் ராஜாதான். அவருடைய
எளிமையே அவருக்குப் பெருமை சேர்திதிருக்கிறதெனப் புகழ்ந்து
தள்ளி இருக்கிறாராம்.
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி!?
****
பி. வாசுவின்
புதிய படத்தில் கமலுடன்நடிக்கும் வாய்ப்பை இழந்து நிற்கிறார்
ஸ்ரேயா. எக்கச்சக்க சம்பளம் கேட்டால்!! எல்லாம் சிவாஜி
கொடுத்த பெருமை மிதப்பில்தான். அதனால் உள்ளதும் போச்சுடா!
****
இயக்குனர்
மாதேஷ், கேப்டன் விஜய காந்தின் 150வது படத்தை இயக்கப்
போகிறார். விஜயகாந்துக்கு இந்தப் படத்தில் வெறும் போலீஸ்
அதிகாரி பதவியிலிருந்து அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்
அதிகாரியாகப் பதவி உயர்வு..
****
முழு நேர
அரசியல் வாதியாகிவிட்ட முன்னாள் நடிகை ஜெயப்ரதா கமலின்
தசாவாதாரத்தில் கமலின் நட்புக்காக மட்டுமே நடிப்பதாகச்
சொல்கிறார். நட்புக்கு என்ன விலை யென்றுதான் தெரியவில்லை!
****
பரத்வாஜ்
இசையில் பா. விஜய்யின் அழகான பாடல் வரிகளுக்கு மஞ்சள்
வெய்யில் படத்தில் நடிகை சந்தியா சொந்தக் குரலில்
பாடியிருக்கிறாராம். மேற்கத்திய இசை ஸ்டைலாம். நடிப்பிற்கு
யார் குரல்?
****
ஷங்கர்
தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் கல்லூரி படத்தில்
க்ளாமராக இல்லாமல் பாவாடை தாவணியுடன் நடிக்கும் தமனா இந்தக்
கல்லூரி ரோலுக்காகப் பல படங்களைத் தியாகம் செய்திருப்பதாகச்
சொல்கிறார். பொய்களைப் பொருத்தமாகச் சொல்லத் தெரிய வேண்டாமோ?..
****
பருத்தி வீரன்
என்ற ஒரே படத்தில் பெயர் வாங்கிய பிரியாமணி ஏகப்பட்ட கண்டிஷன்
போடுகிறாராம். மூத்த நடிகர்களுடன் நடிக்க மாட்டேன், புது முக
நடிகர்களுடனும் நடிக்க
மாட்டேன் என்று! அஜீத், சூர்யா, விஜய்
இவர்களுடன் நடிக்க ரெடியாம். ஒரு படத்தின்வெற்றிக்கே இவ்வளவு
கண்டிஷனா என்று தயாரிப்பாளர்கள் எட்டியே பார்ப்பதில்லையாம்.
*******