Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சின்னச் சின்ன சினி சேதிகள்
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 331

24 செப்டம்பர் 2007


Sundara Gandam
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

"கோவில் உண்டியலில் கோடிகளைக் கொட்டுபவனும் கோவில் வாசலில் பிச்சையெடுப்பவனும் ஒரே இந்தியாவில்!

குடிதண்ணீருக்குத் தவிப்பவர்களும் 'குடி' தண்ணீரில் குளிப்பவர்களும் ஒரே இந்தியாவில்.

பட்டினியால் பாதி வாழ்க்கை வாழ்பவனும் பல லட்சம் 'பார்' பில் கட்டுபவனும் ஒரே இந்தியாவில்.

பெண் சிசுக் கொலைகளைத் தூண்டும் வறுமையும் பெண் விபசாரத்தைத் தூண்டும் பணத்திமிரும் ஒரே இந்தியாவில்"

இவையெல்லாம் கலைஞரின் திரை வசனமோ என்று யோசிக்க வேண்டாம். விக்ரம் - ஸ்ரேயா நடிக்கும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் கலைப்புலி தாணு தயாரிக்கும் 'கந்தசாமி படத்தின் புரட்சிகரமான இ-அழைப்பிதழில் இடம்பெற்ற வாசகங்கள்தான் இவை. கின்னஸ் சாதனையில் இடம் பெறப்போகிறதாம் இந்த அழைப்பிதழ். காரணம் திரை உலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அழைப்பிதழுக்கு 15000 ரூபாய் வீதம் செலவு செய்யப்பட்டிருக்கிறது இதற்காக. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழைத் திறந்தவுடன் எல்.சி.டி. மானிட்டர் திரையில் எட்டு நிமிடத்திற்கு 'கந்தசாமி' படத்தின் ட்ரெய்லர் ஓடத்துவங்குகிறதாம். படத்தின் இயக்குனர் சுசி கணேசனின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த வித்தியாசமான அழைப்பிதழ்.

இந்தப் படத்தைப் பற்றிய சில கொசுறு செய்திகள்:

வித்தியாசமான ஐந்து வேடங்களில் விக்ரம் நடிக்கிறார். அதில் பெண் வேடமும் ஒன்று. இந்தப் படத்திற்காகப் பத்து கிலோ எடையைக் குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறாராம் விக்ரம்.  விக்ரம் நடித்த படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகிறான் இந்த 'கந்தசாமி'.

***

ஒவ்வொரு படத்தையும் தவமாய்த் தவமிருந்து முடிக்கிறவர் அந்த இயக்குனர். தானே இயக்கி நடிக்கும் ஒரு மண்வாசனைப் படத்திற்கு ஜோடியைத் தேடினார். அந்த மண்வாசனைப் படத்திற்கு ஹீரோயினாக நடிக்க 'முத்தழகு'தான் சரியாக வருமென்று அவரைக் கேட்டால், அவர் எனக்கு மண்வாசனை சரியாக வராது, பெர்ஃப்யூம் வாசனை ஹீரோ தான் சரியாக வரும் என்று கூறிவிட்டாராம்.

***

உடல் ஒல்லியாகிவந்த நவ்யா நாயர் தமிழகத்தின் கலைமாமணி பட்டம் பெற்றதில் ஒரு சுற்று பெருத்திருக்கிறார். மதுமிதா என்ற படத்தில் துணிச்சல் மிகுந்த நக்சலைட் பெண்ணாக பிருத்விராஜுடன் நடிக்கிறார். கேரளாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது இந்தக் கதை. தன்னை நக்சலைட் என்று முத்திரை குத்திவிடுவாகளோ என்று பயப்படுகிறாராம் நவ்யா.

***

கார்த்திக்கும் கவுண்டமணியும் காமெடியில் கலாய்த்த' உள்ளத்தை அள்ளித்தா' படத்திற்குப் புது மவுசு . இதை மலேஷியாவில் ரீமேக் செய்கிறார்கள்.
சித்ரா லட்சுமணன் மலேய மொழி பேசி நடிக்கிறாராம். சினிமாவைப் பொறுத்தவரை மலேஷியா ரொம்பப் பின்தங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தைத் தூசுதட்டி எடுக்கும் போதே தெரியவில்லையா?

***

தமிழில் வாய்ப்புக்கள் குறைந்துவரும் சதா 'தக்காரி 'என்ற படத்தில் செம க்ளாமராக நடிக்கிறார். ஆசை வெட்கமறியுமா?

***

2005- 2006க்கான சினிமா சின்னத்திரை விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் துறைகளில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. துருவித் துருவிப் பார்த்தாலும் ஒரு பிரபல நடிகரின் பெயரைக் காண முடியவில்லை - அது விஜய்காந்த் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

***

கொஞ்சம் பாலிவுட்

அமீர்கான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்காகத் தவம் செய்கிறார் கரீனா கபூர். அவருடன் சேர்ந்து நடிக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தும் கால்ஷீட் தள்ளிப்போகிறதே என்ற கவலை அவருக்கு.!

***

தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களைப் படிக்க முடியவில்லையாம் அபிஷேக் பச்சனுக்கு. புதுப்புது அகராதிகளில் மெசேஜ் வருவதுதான் காரணமாம். (ஐஸ் இருந்து கூடவா?)

***

போக்கிரி ஹிந்தியில் இப்போது ரீமேக். சல்'மான்'கான் ஆயிஷா ஜோடி. பிரபுதேவா இயக்கம். சர்வதேசப் புகழ் பாப் பாடகி ஷகீரா இந்தப் படத்தில் பின்னணி பாடுவது சிறப்பு அம்சம். தயாரிப்பு - போனி (மிஸ்டர் ஸ்ரீதேவி) கபூர்.
 

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide