 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Cinema |
| சின்ன சின்ன சினி செய்திகள்
- ஜன்பத் |
| | பிராணிகள் என்றால் பாவனாவிற்கு கொள்ளைப் பிரியமாம். அவர் அதனால் ப்ளூ-க்ராஸ் உறுப்பினராம் (உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அப்பிராணிகளையும் கொஞ்சம் கவனிப்பிங்களா?)
"என்னுடைய நடிப்பு அனுபவத்தில் தசாவதாரம் தயாரிப்பாளரைப் போல பொறுமைசாலியை இதுவரை பார்த்ததில்லை. அறுபது கோடியைப் போட்டுவிட்டு மிகவும் அமைதியாயிருக்கிறார்" - கமலஹாசன். உங்களிடம் அவர் நரசிம்மவதாரம் எடுத்தால் உள்ளதும் போய்விடுமே என்று மனதிற்குள் குமுறிக்கொண்டிருப்பார்!
தசாவதாரம் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக அசின் சொந்தக் குரலில் அய்யர் பாஷை பேசி நடிப்பதைப் பார்த்து கமல் அசந்தேபோய்விட்டாரம்.
****** மலைக்கோட்டைப் பட வெற்றிக்குப் பிறகு தனது தொகையை விசாலமாக்கிக் கொண்டிருக்கிறார் விஷால் - இப்போது மூன்று கோடியாம்.
****** நயன் தாராவும், ஸ்ரேயாவும் இணைந்து தெலுங்கில் பாஸ் என்ற படத்தில் அதிரடிக் கவர்ச்சியுடன் காட்சி அளிக்கிறார்களாம்.
****** வெகுநாட்களுக்குப் பின்பு மம்மூட்டி தமிழ்த் திரையில் தலை காட்டுகிறார் அவருக்கு மிகவும் பிடித்தமான சி.பி.ஐ ரோலில். படம் அறுவடை. வந்தேமாதரம் என்று மலையாளத்தில் வந்த இந்தப் படம் வரி சலுகையை மனதில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம். (பொறுக்கி, போக்கிரிக்கு சலுகை கொடுக்கலாம். வந்தேமாதரத்துக்கு கொடுக்கக்கூடாதா?)
****** கவிதா என்ற தன் சொந்தப் பெயரிலேயே படம் தயாரிக்க நிறுவனம் தொடங்குகிறார் கவுசல்யா. முதல் படம் கன்னடத்தில்தான் இருக்குமாம். (அப்பாடா)
****** பிராணிகள் என்றால் பாவனாவிற்கு கொள்ளைப் பிரியமாம். அவர் அதனால் ப்ளூ-க்ராஸ் உறுப்பினராம். (உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அப்பிராணிகளையும் கொஞ்சம் கவனிப்பிங்களா?)
****** தெனாவட்டுப் படப்பிடிப்பின் பாதியில் படத்தின் தயர்ப்பாளரை திடீரெனக் காணவில்லை. படத்தைத் தொடர காசு இல்லாததால் சொல்லாமல் ஜூட் விட்டு விட்டாரம் அவர்.
****** காதல் நடிகைக்கும் மலையாள மொழி நடிகருக்கும் சேர்ந்து நடிக்கும் போது நெருங்கிய நட்பாகி விட்டது. ஆனால் காதல் நடிகை வீட்டில் கடும் எதிர்ப்பாம்.
****** நடிகை லட்சுமிராயும் எடிட்டர் ஆண்டனியுடம் அடிக்கடி ஒன்றாகவே காணப்படுகிறார்களாம்.
****** "என் கேரக்டரைப் பற்றி நன்கு தெரிந்து அது வித்தியாசமனது என்று தெரிந்தால்தான் கால்ஷீட் பற்றிப் பேசுவேன். ஆனால் நான் கால்ஷீட் கொடுப்பதற்கு லொள்ளு செய்கிறேன் என்று கதை கட்டி விட்டார்கள்" எனக் கண்ணீர் வடிக்கிறார் சதா..
****** கீர்த்தி சாவ்லா வீட்டில் ஜல் ஜல் சலங்கை சப்தம். தினம் நான்கு மணி நேரம் பரத நாட்டியப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாராம். கலைஞரின் உளியின் ஓசை படத்தில் சாமுண்டி என்ற பாத்திரத்தில் நடிக்கிறாரம்.
****** காதல் படத்தில் அப்பாவிதோழியாக சந்தியாவுடன் அலைந்த சரண்யா இப்போது புனிதா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விளையாட்டு, திருவாசகம் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்.
******
மேலும் பல..... |
|
|
|
|
Source: suratha.com
|
|