Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

திரட்டி வந்த திரைச் செய்திகள்
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 336

29 அக்டோபர் 2007


BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

தலை எழுத்து

இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா?

****

வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.  "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெடி சீனாக இருந்தால் விடவே மாட்டாரம். அதனால்தான் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என்றாலும் ஒப்புக் கொண்டாராம். (அந்த ஒரு பாடலுக்கு மட்டும் 8 லட்சம் என்பது சொல்ல மறந்த காரணம்)

****

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்ட நக்மா இப்போது போஜ்புரி மொழி படங்களின் நம்பர் ஒன். ஐந்து படங்களில் கதாநாயகியாய் நடித்து வருகிறார். இப்போது மும்முரமாக தியாவைக் கொஞ்சுவதில் இந்தப் பெரியம்மா பிசியாம்! (ஜோதிகா-சூர்யாவின் குழந்தை தான் தியா.--சரியா?)

****

சத்யராஜும் தெலுங்கு கவர்ச்சி நடிகை முமைத்கானும் வம்புசண்டையில் நடிக்கிறார்கள். முமைத்கான் உடம்பை சிக்கென வைத்திருக்கும் ரகசியத்தைக் கண்டு வியக்கும் சத்யராஜ் அவரிடம் உடற் பயிற்சி டிப்ஸ் பெறுகிறாராம்(அப்பிடிப் போடு)

****

தெனாவாட்டு படத்தில் நடிக்கும் ஜீவா வில்லன்களோடு பறந்து பறந்து மோதும்போது அவர் அடிக்கும் அடியில் கார் கதவுகள் பீஸ் பீஸாகிப்போகின்றனவாம் .(படத்திற்கு பேசிய படி பணம் கொடுக்கறாங்கதானே?) இதில் நடிக்கும் பூனம் பஜ்வாலா பிசியோ தெரபி படித்தவராம்.

****

ராமா நாயுடு தயாரிக்கும் ஆதி விஷ்ணு தெலுங்கு படத்தில் சினேகாதான் கதநாயகி. இதில் துணிச்சலான மாணவியாக நடிகிறாராம்

****

தெலுங்குப் படத்திற்கு தமிழ்ப் படங்களை விட ஐந்து லட்சம் அதிகமாகக் கேட்கிறாராம் நயன்.(ஆமாம், ஆடைகளுக்குச் செலவிடும் பணம் மிச்சம்தானே என்ற காரணமாக இருக்கலாம்)

****

கெட்டவன் பட இயக்குனர் நந்து, சிலம்பரசர் கொடுக்கும் டார்ச்சரினால் நொந்து போய் படத்திலிருந்து ஜூட் விட்டு விட்டாராம். ஆறரைக் கோடி பட்ஜெட்டில் மூன்று கோடி தாண்டியும் படத்தில் சிறுபகுதிதான் முடிந்திருக்கிறதாம். தயாரிப்பாளர் படத்தை இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.

****

விஜய்க்கு எஸ், த்ரிஷாவுக்கு நோ

தாய் காவியம் படத்தில் கவிஞர் பா விஜய்க்குத் தாயாக ராதிகாவிற்குப் பதில் குஷ்பூ நடிக்கிறார். ஆனால் அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க மட்டும் நோ என்றுவிட்டாராம். ஐஸ்வர்யா அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். (த்ரிஷ¤ மேல் என்ன கோபம், குஷ்பூ மேடம்?)

****

தவமாய்த் தவமிருந்து படத்தின் தயாரிப்பாளர் ஷண்முகம் தயாரிக்கும் பெருமாள் படத்தில் சுந்தர் சி, நமீதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் 'ஓ ரசிக்கும் சீமானே வா. ஜொலிக்கும் உடையணிந்து' என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. நமிதான் நடனம்.

****

பழசை மறக்கலாமா?

களத்தூர் கண்ணம்மா (குழந்தை நடிகராக கமல் நடித்தது) படம்
nobody’s child
என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது..

எம். ஜி. ஆர் , சரோஜா தேவி நடித்த அன்பே வா படம்
come September என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

சிவகுமார் முதலில் தோன்றிய படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. (1966)

****

ரங்கோன் ராதா: அறிஞர் அண்ணாவின் நாவல் படமாகியது. சிவாஜிக்கு வில்லன் வேஷம். பானுமதியின் நடிப்பைப் பார்த்த அண்ணா நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பட்டம் சூட்டினார்.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide