ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டிற்குப் பாலபிஷேகம், பீர் அபிஷேகம்
செய்து, மொட்டை அடித்து, அலகு குத்தி, இனிப்பு வினியோகம்
செய்து தங்கள் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்புகளையும்
வெளிப்படுத்திய பரபரப்பான நாள் ஜூன் 15. சிவாஜி படம்
வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாகவே மூன்று வாரங்களுக்குப்
பெரு நகரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
ஆயிரம் ரூபாய் கூடக் கொடுத்து டிக்கெட் வாங்க அலைமோதியது
கூட்டம்.
திரையிடப்பட்டபோது ரஜினி தோன்றும் காட்சிகளிலெல்லாம்
விசிலடித்து, கூச்சலிட்டு, மலர் தூவி ரஜினிபால்
தங்களுக்குள்ள பக்தியை வெளிப்படுத்தினார்கள். ரஜினி (சிவாஜி)
படம் பற்றிய சில சுவையான தகவல்கள்.
●
சிவாஜி
படத்திற்கான ரஜினியின் சம்பளம் - 40 கோடி (அமிதாப்பச்சன் + அபிஷேக்
பச்சன் + ஹிருதிக்ரோஷன் + அமீர்கான் + ஷாருக்கான் சம்பளங்களைவிட இரு
மடங்கு)
●
உலகம் முழுவதும்
27 நாடுகளில் ஒரே நாளில் 2900 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
இந்தியா - 2200
சைனா - 211
ஜப்பான் - 130
சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா மற்ரும்
நியூசிலாந்து - 100
மத்திய கிழக்கு நாடுகள் - 100
அமெரிக்கா - 80
UK - 70
(இதற்கு முன்னால் இந்தியப் படம் "க்ரிஷ்" 14 நாடுகளில் 1200
தியேட்டர்களில் திரையிடப்பட்டது)
●
கேசினோ ராயல்
என்ற ஆங்கிலப் படம் இதற்கு முன்னால் 36 நாடுகளில் 3200
தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
●
கடைசி மூன்று
படங்களில் ரஜினிகாந்த் வாங்கிய ஊதியம்:
பாபா - 20 கோடி
சந்திரமுகி - 25 கோடி
சிவாஜி - 40 கோடி
●
ஆசியாவில் ஊதியம்
பெறுவதில் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக வருகிறார் ரஜினி.
●
சங்கர் இதுவரை
இயக்கிய படங்களில் சிவாஜி படத்திற்கான செலவுதான் மிக அதிகம்.
●
மொத்த செலவில்
68 சதவிகிதம் வெளிப்புறப் படப்பிடிப்பிற்கும் 12 சதவிகிதம்
படத்தில் வரும் கிராஃபிக்ஸ் மாயத்திற்கும் செலவழிக்கப்பட்டன.
●
உடைகளுக்கு 8
சதவிகிதம் ரஜினியைத் தவிர இந்தப் படத்தில்
பங்கேற்றவர்களுக்கான ஊதியம் 8 சதவிகிதம், 2 சதவிகிதம்
இசைமைப்பாளர் ரஹ்மான், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்
செலவழிக்கப்பட்டது. வீண் செலவு - 2 சதவிகிதம்.
●
சென்னையில்
மட்டும் அபிராமி ராமநாதன் ஆறரைக் கோடி ரூபாய்க்கு வெளிடும்
உரிமையை வாங்கியுள்ளார். கேரளாவில் 6 கோடிக்கும் ஆந்திராவில்
17 கோடிக்கும் கர்நாடகாவில் 9 கோடிக்கும் வெளியிடும்
உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
●
ஏ.வி.எம்.
நிறுவனம் சிவாஜி படம் வெள்ளி விழாவைத் தாண்டினால் லாபத்தில்
25 சதவிகிதத்தை பல தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக
வழங்குமாம். ஏற்கனவே வெளியீட்டு உரிமை மூலம் 50 கோடி
லாபத்தைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள்.
●
ஜப்பானிலிருந்து
வெளிவரும் டோஷோ என்ற பத்திரிகை ஹாலிவுட் படம் காசினோ ராயல்
படத்தைவிட எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும்
ஜாக்கிச்சானுக்கு அடுத்தபடி அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினி
என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளது.
●
மேலும் சிவாஜி
படம் 50 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினால்
வசூல் 430 கோடியைத் தாண்டும் என்றும் கூறுகிறது.
●
திரையுலக
வரலாற்றில் முதல் முறையாக சிவாஜி துருக்கி, ஹாசா, கோங்கா (தெற்கு
ஆப்பிரிக்காவின் பழங்குடியினரின் மொழி) ஆகிய மொழிகளில் டப்
செய்யப்படுகிறதாம்.
●
UKயில்
2007ல் வெளிவந்திருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் பின்னுக்குத்
தள்ளி சிவாஜி வசூலில் முன்னிலை வகிக்கிறது. உதாரணமாக
ஸ்பைடர்மேன் 7 வாரங்களில் 320 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு
ஈட்டிய தொகை 1,51743 பவுண்டுகள். சிவாஜி 12 தியேட்டர்களில்
ஒரு வாரத்தில் செய்த வசூல் 1,68603 பவுண்டுகள். இன்னும் பல
ஹாலிவுட் படங்கள் பல தியேட்டர்களில் பல வாரங்களில் ஓடிப்
பெற்றுத் தராத வசூலை சிவாஜி ஒரே வாரத்தில் 12 தியேட்டர்களில்
மட்டுமே ஓடி இவ்வளவு வசூலைக் குவித்து சாதனை
புரிந்திருக்கிறது.
*******