Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா!
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 310

30 ஏப்ரல் 2007


Astrology paid service
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

உலகின் புராதனமான இதிஹாஸமான மஹாபாரதத்திலும், பைபிளில் பழைய ஏற்பாட்டிலும் பேசப்படும் கலை மல்யுத்தக் கலை! ஜராசந்தனை பீமன் பல கிடுக்கிப் பிடிகள் போட்டுத் திணற அடித்ததை விலாவாரியாக மஹாபாரத பிரவசன மண்டபங்களில் புலவோர் சொல்வதைக் கேட்டு வீரம் வளர்ந்த நம் நாட்டில் மல்யுத்தக் கலை மோகம் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. ஷ¤ய் ஜினோ என்று சீன மல்யுத்தக்கலை 4000 ஆண்டுகளுக்கு முன்பே கொடி கட்டிப் பறந்திருக்கிறது. ஆனால் இன்று எல்லா நாடுகளிலும் வீட்டிலேயே தொலைக்காட்சி மூலம் இந்த மல்யுத்தத்தை அனைவரும் கண்டு களிக்க வாய்ப்பை அளித்துள்ளது டபிள்யூ.டபிள்யூ. ஈ. எனப்படும் வோர்ல்ட் ரெஸிலிங் என்டெர்டெயின்மெண்ட்!

இதைப் பார்க்கும் சிறுவர்களும், இளைஞர்களும் தங்கள் அபிமான வீரர்களைப் போல யுத்தம் செய்யத் தொடங்குகையில் அதைச் சமாளித்து அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது இன்றைய தாய்மார்களுக்கு! அண்டர்டேகர், கென்னடி என்று ஆண்கள் மட்டுமல்ல மெலினா, விக்டோரியா என்று பெண்களும் இப்படி மல்யுத்தத்தில் ஈடுபடுவதால் ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக உலகெங்கும் இந்தக் காட்சியில் தொலைக்காட்சிப் பெட்டியோடு ஐக்கியமாகி விடுகின்றனர்.

வோர்ல்ட் ரெஸிலிங் ஃபெடரேஷன் என்று அழைக்கப்பட்டு வந்த இது வோர்ல்ட் வைல்ட் லைஃப் பண்ட் இதன் மீது வழக்குத் தொடர்ந்ததன் விளைவாகத் தன் பெயரை வோர்ல்ட் ரெஸிலிங் என்டெர்டெயின்மெண்ட் என்று மாற்றிக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனுடைய மூன்று நிகழ்ச்சிகளான ரா, ஸ்மாக்டவுன் மற்றும் ஈஸிடபிள்யூ (RAW, SMACKDOWN, ECW) ஆகியவை உலக அளவில் பேசப்படும் நிகழ்ச்சிகளாகும்!

1985ல் ரெஸில்மேனியா என்ற பயங்கர மல்யுத்த நிகழ்ச்சி ஆரம்பித்தபோது அது உடனடி வெற்றியானது. 1999 ஏப்ரலில் ஆரம்பித்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

போட்டிக்கு வரும் வீரர்கள் ஒருவரை ஒருவர் வீரவசனம் கூறி இழித்தும் ஏளனம் செய்தும் தன் பெருமையைப் பறை சாற்றுவதும் நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது. பிறகு வரும் தடாலடிக் காட்சிகளான சேர்களினால் அடிப்பது, தலைக்கு மேலே தூக்கி ஏரோபிளேன் சுற்று சுற்றி போட்டியாளரை எறிவது தலையைப் பிடித்து இழுத்தவாறே ரிங்கைச் சுற்றிச் சுற்றி வருவது உள்ளிட்ட ஏராளமான நாடகக் காட்சிகள் பார்ப்பவரைப் பரபரப்படையச் செய்யும்! மாமிச மலைகளாக இருவர் மோதும் போதே உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களான கென்னடி, அண்டர்டேகர் ஆகியோர் வரும் போது பெரிய எதிர்பார்ப்போடு காத்திருப்பர். இதில் போதாக்குறைக்கு மெலினா, லிடா, மிக்கி ஜேம்ஸ் என மல்யுத்த வீராங்கனைகள் வேறு களத்தில் இறங்குவதால் இது 'கண் கொள்ளாக் காட்சியாக' உலகெங்கும் பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியாகி விட்டது!

இதெல்லாம் ஃபிக்ஸிங் என்று சொல்வோரும் உண்டு; இல்லை, இல்லை அடிப்பதும் அடி வாங்குவதும் பொய்யா என்ன என்று வேசப்படுவோரும் உண்டு!மிக் போலி என்ற மல்யுத்த வீரர் எழுதிய புத்தகம், மல்யுத்த வீரர்களின் தீம் சாங், வீரர்களின் 'திருஉருவம்' பொறிக்கப்பட்ட டி ஷர்ட் ஆகியவற்றால் மல்யுத்த வீரர்கள் இலக்கியம், இசை, ஃபாஷன் ஆகிய துறைகளில் தங்கள் கால்களைப் பதித்து விளம்பரத்தையும் வணிகத்தையும் பெருக்குகின்றனர் என்பது தனிக்கதை!

"எல்லாம் எழுதப்பட்டதய்யா, எழுதப்பட்டது. ஆனால் 15 நிமிடங்களில் எழுதியதை விட அதிகமாகவே செய்து (நடித்து என்று அர்த்தம் கொள்க) காட்டுகிறார்கள்" என்று ட்விட்செல் என்ற ப்ளோரிடா பல்கலைக் கழக பேராசிரியர் அங்கலாய்க்கிறார். "பொய்யோ, மெய்யோ, அதில் வரும் கேரக்டர்கள், லைட் எஃபெக்ட், உணர்ச்சி ஊட்டும் நாடக நிகழ்ச்சிகள் ஆகியவை இளைஞர்களை வசீகரிக்கின்றன" என்கிறார் அமெரிக்காவின் தேசீய பள்ளிப் பாதுகாப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரான ரொனால்ட் ஸ்டீபன்ஸன். "எல்லாப் பள்ளிகளிலும் முக்கிய டாபிக்கே இந்த வீரர்கள் தான்" என்பது அவரது கண்டுபிடிப்பு! நிபுணர்களுக்கு மட்டுமே வரும் இந்த அடிதடிப் பிடிகள் சிறுவர்களுக்கு வராது என்ற விஷயம் அவர்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறதே என்று அப்பாக்களும் அம்மாக்களும் புலம்புவது வாடிக்கையாகி விட்டது!

2005ம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ரெஸில்மேனியா - 21 நிகழ்ச்சிக்கான டிக்கட்டுகள் விற்பனை ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே விற்றுத் தீர்ந்து ஒரு ரிகார்டையே ஏற்படுத்தி விட்டது!

இப்போது வருடாந்திர நிகழ்ச்சியான ரெஸில்மேனியா - 23 டெட்ராய்ட்டில் 2007 ஏப்ரல் முதல் தேதி அன்று நடக்க திட்டமிடப்பட்டது.இதில் தீம் சாங் - சலிவாவின் "லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்" ஆகும். பிப்ரவரி 15ம் தேதி வாக்கிலேயே டிக்கட் விற்பனை 50 லட்சம் டாலரைத் தாண்டி விட்டது! 75000 பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சி மல்யுத்த வரலாற்றிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தும்! படிஸ்டா, அண்டர்டேகர், ஜான் செனா, ஷான் மைக்கேல்ஸ் என்று ஆண் சிங்கங்கள் ஒரு புறம் மோத மெலினா, ஷ்லி மசாரோ,கேன், கிரேட் காளி என பெண்புலிகளும் மோதுவதால் இவர்கள் பேசப்படும் வீரர், வீராங்கனைகள் ஆகி விட்டனர்!

பழம்பெரும் மஹாபாரத வீர விளையாட்டான மல்யுத்தத்திற்கு ஒரு மேனியா என்றால் அந்த ரெஸில்மேனியாவை வரவேற்பதில் என்ன தவறு?

நன்றி : சின்னத்திரை

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide