இராசிபலன்கள் (20-4-2009 முதல் 26-4-2009 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தண்ணீர், ஐஸ் போன்ற திரவப் பொருட்கள் மற்றும் குளிர்பான வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், நீர்வளம் சார்ந்தவர்கள், கப்பல் பணி புரிவோர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று பொறுமையுடன் இருத்தல் நல்லது. சூதாட்டங்களின் மூலம் பணம் கிடைக்கும் என நினைத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். யாத்திரையில் கவனம் தேவை. வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் கிடைப்பதற்கு சற்று கால தாமதம் ஆகலாம். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட்செலவுகள் உண்டாகும். தேவையற்ற புதிய நட்புகளால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி போனற் திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஒரு சிலருக்கு பண வரவுகள் உண்டாகும். பொதுத் தொண்டு நிறுவனத்தினர், ஆலயப் பணி புரிவோர், வங்கி எழுத்தாளர்கள், அச்சுத் தொழிற் செய்வோர், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும். உடல் நிலையில் கண், காது போன்ற இடங்களில் கவனம் தேவை. வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாரத ஆதாயம் உண்டாகும். குடும்பச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்த வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள். நெருப்பு, காவல் துறை, ராணுவம் சார்ந்தவர்கள, கார், லாரி போனற் வாகனத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர்கள், அரசியல்வாதிகள், கமிஷன், தரகுத் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணம் ஏமாற வேண்டாம். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கை வந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்கள் முதலியன விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். கை விட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தீராத நாட் பட்ட நோய்களுக்கு புதிய மருத்துவரின் உதவிகளை நாடுவீர்கள். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். காதல் விஷயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக் கிழமையில் எள்ளெண்ணை தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வீட்டை அலங்கரிப்பதிலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் பொருட் செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். காய்கறிகள், இலை, கீரை போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், கலைத் துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருதல் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடம்பில் வாயு, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும், புதிய பொறுப்புகளும் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும். யாத்திரைகளை சற்று தள்ளிப் போடவும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். செய் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். சேர் மார்க்கெட், தங்கம் வௌ;ளி போன்ற நகை வியாபாரிகள், ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், அரசு வழக்கறிஞர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், கோவிலில் பணிபுரிவோர் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக் கிழமையில் நல்லெண்ணை தீபம் இட்டு பிதுர்க்கள் வழிபாடு மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வீடுகளில் அல்லது யாத்திரையின் போது பொருள் இழப்ப ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தையின் உடல் நிலை பாதிப்பால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுக்களும் பொருள் வரவும் உண்டாகும். தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். ஆலயப் பணி செய்வோர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருட்கள், நவரத்தினங்களின் வியாபாரிகள், தங்கம் வெள்ளி போன்ற நகைக்கடை வியாபாரிகள், சேர் மார்க்கெட் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனைஅடைவார்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்குச் வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். அண்டை அயலார்களுடன் காரணமற்ற சிறிய விஷயங்களுக்காக வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்.
இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். மின்சாரம், எரி பொருள், ஹோட்டல் தொழில் செய்வோர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் இவற்றில் பணிபுரிவோர்கள், இரசாயனம் மற்றும் அணு விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வெளி நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். சொத்து விஷயமாகக் கோர்ட் வழக்கு போன்றவற்றில் நல்ல சாகமான முடிவுகளை எதிர்பார்க்க கால தாமதம் ஆகலாம். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர்பாராத ஆசிகளால் மன நிம்மதி அடைவீர்கள். உடம்பில் சளி மற்றும் சுர சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பயிலும் மாணவர்கள், இசைத் துறை, சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல நெய்திகள் வந்து சேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்பு உள்ளது. கட்டி முடிக்கப்படாத தடைபட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள். வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகை கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. வங்கித் தொழில் புரிவோர்கள், வழக்கறிஞர்கள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், நோட்டு புத்தகம், பேனா போன்ற ஸ்டேசனரி பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். யாத்திரையின் போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். விவசாயம் சுமாராகப் பலிதமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும், மன நிம்மதி இன்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். மீன், முட்டை, மாமிசம், எண்ணை, பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள், அணு சக்தித் துறை சார்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் சளி அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். காதல் விஷயங்களில் மற்றவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத் துறையினருக்கப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாய் இருக்கும். வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கும். சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

About The Author