இராசிபலன்கள் (8-7-2013 முதல் 14-7-2013 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் உதவி கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். வெகு காலமாக, மறைமுகமாக இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் தீரும். வராத கடன், கொடுத்து இருந்த பணம் ஆகியவை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். நாட்பட்ட சொத்து வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். திரவப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள், உப்பு வியாபாரிகள், படம், கண்ணாடி போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்பவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவத்துறை சார்ந்த மற்றவர்கள்
ஆகியோர் நற்பலன் அடைவர். செய்யும் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கை தேவை! காதல் விஷயங்களில் வெற்றி தேடி வரக்கூடிய காலமாகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் அரிசி தானமும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வழக்கு சம்பந்தமான விஷயத்தில் அநுகூலமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும் வீண் பிரச்சினைகளும் ஏற்படலாம். நீண்ட பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பெண்களால் தூரத்தில் நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்கள், பலன்கள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைச் சந்தித்து நிம்மதி குறையலாம். பூ, பழம் போன்றவற்றை விற்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள்,
வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரம்ம் நடத்துபவர்கள், நகைக் கடை நடத்துபவர்கள், நிதித் தொழில் செய்வோர் ஆகியோருக்கு நற்பலன் உண்டாகும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடும் கடலை தானமும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை! பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் நல்லது. வாயு, வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். கேஸ் வெல்டிங், தீயணைப்புத்துறை, நிலக்கரித் தொழிற்சாலைப் பணி, உணவகம் போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்பவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், கார உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. பயணங்களின்போது வீண் பிரச்சினைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் துவரை தானமும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். உடற்சூடு, மேகம் போன்ற நோய்கள் வந்து விலகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில், இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடும் பயணங்களின் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்துக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். காரணமற்ற சிறிய விஷயங்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். கலைத்துறையினரும் அரசியல்வாதிகளும் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது! பயணங்களின்போது வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும்! வராத கடன், கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும். எழுத்துப்பணி செய்பவர்கள், வங்கிப் பணியாளர்கள், காய்கறி, கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் வியாபாரிகள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது! ஆலய வழிபாடுகளால் நிம்மதி அடைவீர்கள்! செய்யும் தொழிலில் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுச் சமாளித்துக் கொள்ளுவீர்கள். பிறருக்காகப் பிணை அளிப்பதால் வீண் பிரச்சினைக்கு ஆளாக நேரலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். நண்பர்கள், உறவினர்களால் பணவரவு உண்டு. தந்தை – மகன் உறவு சுமாராகக் காணப்படும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சினைகள் குறையும். வாய், பற்கள், முகம் ஆகியவற்றில் பிரச்சினைகள் வந்து போகும். விவசாயம் செய்பவர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், பூஜைப் பொருள் விற்பவர்கள், உப்பு வியாபாரிகள், திரவ உணவு வியாபாரிகள், நறுமணப் பொருள் வியாபாரிகள், ரத்தின வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும். நீண்ட நெடும் பயணங்களால் லாபம் அடைவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் பச்சரிசி தானமும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கண், காது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்! நீண்ட காலமாக வராத கடன், கொடுத்திருந்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். காதல் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழக்குகளில் அநுகூலமான தீர்ப்புகள் கிடைக்கும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவதிப்படாதீர்கள்! மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதில் சற்றுப் பின்னடைவுகள் வந்து சேரும். பயணங்களில் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது! குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பங்குத் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணுவீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும். பிறர் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் நண்பர்களின் ஆதரவால் நிறைவேறும். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- விநாயகர் வழிபாடு.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம் வேதியியல் சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள், பலசரக்குத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். நண்பர்களிடம் காரணமற்ற மனக் கசப்புகள் ஏற்பட்டுப் பிரச்சினைகள் உருவாகலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு இடையூறுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் பொருட்செலவுகள் உண்டாகும். வெகு காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம் கை வந்து சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்! பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமாகச் செயல்படுவது நல்லது. புதிய வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்றுத் தாமதமாகச் செய்வது உகந்ததாகும். உறவினர்கள், நண்பர்களின் திடீர் வரவால் பொருட்செலவுகள் வந்து சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு சென்று வருவீர்கள். விவசாயம் செய்பவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடும் எள் தானமும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வேதியியல், அணு ஆராய்ச்சி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், வட்டித் தொழில் செய்பவர்கள், ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய இரும்பு, பேப்பர், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! நரம்பு, உணவுக் குழல் ஆகியவற்றில் தொல்லைகள் உண்டாகும். நீண்ட பயணங்களில் மிகவும் கவனமாகச் சென்று வாருங்கள்! நண்பர்களால் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்; நற்பெயரும் புகழும் உண்டாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும். தாய் – தந்தையருக்கு உடல்நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் வழிபாடு.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படக் கூடும். எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. தாய் – தந்தையர் உறவுகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். தென்திசையிலிருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள். உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட்செலவுகள் வந்து சேரும். வாகனத் தொழில் செய்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், நாடக, திரைப்படத்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தின, வெள்ளி வியாபாரிகள் ஆகியோருக்கு நற்பலன் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். தீராத பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும். சளி, ஒவ்வாமை போன்ற நோய்கள் வந்து போகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வரவு உண்டாகும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாலஷ்மி வழிபாடும் மொச்சை தானமும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்க முயற்சிப்பீர்கள். பயணங்களின்போது சம்பந்தமில்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும். நாட்பட்ட வழக்கு விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! வராத கடன், கொடுத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். சிலருக்கு வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் இடமாற்றம் ஏற்படலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும். பூர்விகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்! ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு நண்பர்கள், பங்காளிகள் போன்றோரால் ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சீராகும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். பயணங்களின்போது பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மை அடைவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத பண வரவும் பொருட்செலவும் உண்டாகும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! குடும்பச் சொத்துக்கள், பாகப் பிரிவினை போன்ற விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும் காலமாகும். புனிதப் பயணம் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும். ஆடம்பர அலங்காரப் பொருள் விற்பவர்கள், வேதியியல்துறையினர், கமிஷன், தரகு போன்ற தொழில்கள் செய்பவர்கள், மரம், காய்கறி வியாபாரிகள், அஞ்சல்துறையினர், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் லாபம் அடைவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர்ப் பண வரவு உண்டு. வர வேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட்செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது!

இராசியான எண்கள்:- 5, 6.
இராசியான நிறங்கள்:- பச்சை, வெள்ளை.
இராசியான திசைகள்:- வடக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கவனமாக இருந்தால் வீட்டில் திருட்டுப் போவதைத் தடுக்கலாம். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக எதிர்பாராத பொருட்செலவுகள் வரக் கூடும். பயணங்களில் கவனமாக இருத்தல் நல்லது! குறிப்பாக, பயணங்களின்போது குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நெருப்பு, கேஸ், சிற்றுண்டி, அரிசி, பலசரக்கு ஆகியவை சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றத்தில் பணிபுரிவோர், மருந்து வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடையலாம். செய்யும் தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகளில் மேலும் சற்றுப் பொறுமையைக் கடைப்பிடித்தல் நல்லது! இதுவரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருங்கள்! முதுகு, கால்கள் ஆகியவற்றில் நோய்கள் வந்து விலகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய வழிபாடு.

—மீண்டும் அடுத்த வாரம்…
*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, Tamil Nadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390
Website: www.gnanayohi.com

About The Author