இராசிபலன்கள்(16-2-2015 முதல் 22-2-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பணியில் இருப்பவர்களுக்குப் பணி நிரந்தரமும் சம்பள உயர்வும் உண்டாகும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் காவல்துறையினர் உதவியால் சொத்து திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். திருமண விஷயங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லதாகும்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். அலுவலகம், வீடு ஆகியவற்றை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு உண்டாகலாம். நிலம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள். படித்த, வேலை கிடைக்காத இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இது வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரும்பு, இயந்திரம், வேதியியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். நரம்பு, இரத்தம் ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகலாம். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்! காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான விளைச்சல் உண்டாகும். குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். பயணத்தின்போது குழந்தைகளை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும். நீண்ட காலமாகத் திரும்பி வராத பணம் காவல்துறையினரின் உதவியால் திரும்பி வந்து சேரும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் இது நாள் வரையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! மகான்களின் எதிர்பாராத தரிசனத்தால் நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுடன் எதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். பூஜைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்திருந்த நபர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதிலும், பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் ஏறி இறங்கும்போது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது! பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்பு ஏற்பட்டுப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணியாற்றுதல் சிறந்ததாகும். ஒரு சிலருக்குத் தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். பயணத்தில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்! கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருந்துப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது! வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பழைய வீடு வாகனங்களை விற்றுப் புதிதாக வாங்க முயற்சிப்பீர்கள். தீராத நோய்கள் தீர நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். உடற்சூடு, காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவால் திருமணம் நடைபெறும். வாகனப் பணி செய்பவர்கள், கட்டடப் பணி ஆற்றுபவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள், கட்டட சம்பந்தமான கமிசன் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பர்கள், உறவினர்கள் போன்றோருடன் புதிய தொடர்பு ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த முயற்சி செய்து சரி செய்து விடுவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் கல்வி பயின்று வருதல் நல்லது! வேலையாட்களால் சிற்சில செலவுகளும் நிம்மதியின்மையும் வந்து சேரும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! நண்பர்களால் வீண் செலவுகள் வந்து சேரலாம். தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதரவு கிடைக்கும். நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பூ, பழம், பூஜைப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், கணினி சாதன வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியும் பரிசு, பாராட்டு போன்றவையும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். குலதெய்வ ஆலய வழிபாட்டுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். செய்யாத குற்றத்துக்கு அவப் பெயர் சேர வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டும்! சொத்து விஷயமாகப் புதிய பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் வந்து சேரலாம். பூஜைப் பொருள் வியாபாரிகள், திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல்துறை சார்ந்த பணியாளர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். குடும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். எலும்பு, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனத்துடன் இருப்பது நல்லது! பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவர். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது சிறந்ததாகும்! நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் இருந்த படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனமாய் இருப்பது நல்லது! அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், வேதியியல், கழிவுப் பொருள் சம்பந்தமான வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவால் செலவு ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டில் காரணமில்லாத சில பிரச்சினைகள் ஏற்பட்டுப் புதிய வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலையில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்பு தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலா மேற்கொள்வீர்கள். தந்தை மகன் உறவில் இருந்து வந்த மனக் கசப்பு குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். அரசு வழக்குரைஞர்கள், அஞ்சல்துறையினர், வங்கிப் பணி ஆற்றுபவர்கள், எழுத்தாளர்கள், எழுதுபொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கணிதம், அச்சுத்தொழில் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். வர வேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். புதிய வேலைவாய்ப்புகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது! பயணங்களில் கவனத்துடன் சென்று வாருங்கள்! வீடு வாகனம் ஆகியவற்றைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படும். எதிர்பாராத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வேலை கிடைக்காதவர்கள் புதிய வேலைவாய்ப்புக்காகப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! வாயு, வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும். வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவுகளைக் காணத் தாய்நாடு சென்று வருவீர்கள். வெகு காலமாகக் காணாமல் போன பொருட்கள், நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். தந்தை மகன் உறவில் காரணமற்ற முன் கோபத்தால் பிரச்சினைகள் உருவாகலாம். அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், ஒப்பந்தம், கமிசன், ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், தோல் தொழிற்சாலை சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், வட்டிக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர், அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தீயணைப்புத்துறை, ராணுவம், காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், உணவகத் தொழில் நடத்துபவர்கள், சிறு தின்பண்ட வியாபாரிகள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மசால் பொடி வியாபாரிகள், விறகு, நிலக்கரி போன்ற எரிபொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். குடும்பத்தில் இதுநாள் வரை தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இப்பொழுது நடைபெறும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்றுத் தள்ளிப் போடுங்கள்! விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயரும் புகழும் கிடைக்கும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகள் மூலம் நல்ல லாபம் அடைவர். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. அழுகும் பொருட்கள், அசைவ உணவுப் பொருட்கள், கழிவுப் பொருட்கள், பழைய பொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கல்வி பயின்று வருவது நல்லது! நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்குரைஞர்களை நாடுவீர்கள். நாட்பட்ட தீராத நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நோய் தீரும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள். வீடு, வாகனம் ஆகியவற்றைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் வந்து சேரக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author