இராசிபலன்கள்(6-4-2015 முதல் 12-4-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! கணவன் – மனைவி உறவில் இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவர். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நிலபுலன்கள் வாங்குவோர் விற்போர், கட்டட சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழில் செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டிப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் விற்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். வங்கி உதவி மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்!

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கால்களில் கவனம் தேவை! பூ, பழம், பூஜைப் பொருட்கள், கணினி ஆகிய பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் நறுமணப் பொருள் வியாபாரிகள், இனிப்பு சம்பந்தமான சிற்றுண்டிப் பொருட்கள் விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். குழந்தைகளின் உடல்நிலையிலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்! பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிகவும் சிரமப்பட்டுச் சரி செய்து விடுவீர்கள். குலதெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கி மூலமாக நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பயணத்தின்போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருங்கள்! உற்றார் உறவினர்களின் வரவால் நன்மை அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனங்களைப் புதுப்பிப்பதற்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்! மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். முதுகு வலி, மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விஷயத்திலும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையாய்ப் பேசிப் பழகுங்கள்! தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த அறிவியலாளர்கள், வேதிப்பொருள் வியாபாரிகள், பழைய இரும்பு, கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். புனிதப் பயணம் சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசிப் பழகுங்கள்! காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல ஆதாயம் பெறக்கூடிய காலமாகும். பயணத்தின்போது மிகவும் கவனத்துடன் சென்று வருவது நல்லது! மின்சாரம், நெருப்பு சம்பந்தமான பொருட்கள் விற்பவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள், விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், கேஸ், வெல்டிங் சம்பந்தமான பொருட்கள் விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை – மகன் உறவில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த பூர்விகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் கைக்கு வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய வீடு மாறுவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், கணினி தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்பவர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். கணவன் – மனைவி உறவில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஆகியவை வந்து போகலாம். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம், பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீர்கள்! நடிக – நடிகைகள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், கட்டுமானப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் மிக எச்சரிக்கையுடன் கல்வி பயின்று வருதல் நல்லது! பூர்விகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்கள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். பழைய இரும்பு, பழமையான இயந்திரங்கள் ஆகியவற்றைச் சார்ந்த தொழில்களில் இருப்போர், வேதித்துறை சார்ந்தவர்கள், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழில்கள் செய்பவர்கள், சாயப் பொடி வியாபாரிகள், அசைவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது! நாட்பட்ட பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணிதம், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள்,
வழக்குரைஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், புகைப்படக் கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விவசாய முறைகளின் மூலமாக நல்ல விளைச்சல் கிட்டும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு, நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! பொருளாதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடி மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டம் சம்பந்தமான விஷயங்களில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது! பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்படலாம். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நிலம் சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், நகை வியாபாரிகள், காவல்துறையினர், ராணுவத்தினர், தீயணைப்புத் துறை, கேஸ், வெல்டிங் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தொலை தூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருப்பதால் விபத்துக்களைத் தடுக்கலாம். நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடி மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட இருப்பதால் கவனம் தேவை! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வாராக் கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டுக்களும் பெறுவார்கள். காதல் விஷயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் மாணவர்கள் கல்வி நிலையத்துக்கு கவனத்துடன் சென்று வர வேண்டும்! புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காக நீண்ட காலமாகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரலாம். திரவப் பொருள் வியாபாரிகள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு, உர வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வெகு நாட்களாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பங்காளியுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! வாகனங்களில் பணியாற்றுவோர், மின்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்! சுற்றுலாப் பயணம் செய்பவர்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்வது நல்லதாகும்! பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள்! வெளிநாடு செல்லுதல் போன்ற விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். இரும்பு, இயந்திரம், வேதியியல் சார்ந்த தொழில்கள் செய்பவர்கள், ஆலை அதிபர்கள், எண்ணெய் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும். உற்றார் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவால் செலவுகள் வந்து சேரும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் ஈடுபடுவோர் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்! மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். அரசு வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் செலவுகளும் நிம்மதியின்மையும் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். உணவகம் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுபவர்கள், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தீராத நாட்பட்ட நோய்கள் தீரும் வகையில் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author