அனாடமிக் தெரபி (16) -சிறுநீரகம்

சிறுநீரகத்தில் வரும் நோய்களுக்குக் காரணம் என்ன?

நாம் குடிக்கும் நீர் நேராகச் சிறுநீரகம் செல்கிறது. சிறுநீரகம் தண்ணீரிலுள்ள அனைத்து நல்ல பொருட்களையும் எடுத்துப் பிரித்து இரத்தத்தில் ஏற்றிவிடுகிறது. இரத்தம் உடம்பிலுள்ள செல்கள் அனைத்துக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறது. செல்கள் நல்ல தண்ணீரை உள்ளே எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்திய பிறகு கழிவு நீரை வெளியேற்றுகின்றன. அது இரத்தத்தில் கலக்கிறது. இப்படி, நமது உடலிலுள்ள செல்கள் அனைத்தும் தண்ணீர் குடிக்கின்றன; சிறுநீர் கழிக்கின்றன. இப்படி ஒவ்வொரு செல்லும் கழிக்கும் சிறுநீரை இரத்தம் மொத்தமாகச் சிறுநீர்ப் பைக்குக் (யூரினரி பிளேடர்) கொண்டு வருகிறது. நாம் அதை வெளியே அனுப்புகிறோம்.

நம் உடலில் பல ஆயிரக்கணக்கான செல்களுக்கு நோய் வந்து அதைக் குணப்படுத்த முடியாமல் தவிக்கும்பொழுது நிறையத் தண்ணீர் தேவைப்படும். அப்பொழுது அனைத்து செல்களும் சிறுநீரகத்திடம் "தண்ணீர் வேண்டும்! தண்ணீர் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கும். சிறுநீரகம் செல்களின் நோயைக் குணப்படுத்துவதற்காகத் தண்ணீரை அனுப்பி அனுப்பி ஓய்ந்து போய் அதற்கு நோய் ஏற்படும். எனவே, சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) என்பது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. சிறுநீரகத்தில் சிகிச்சை அளித்தால் அதைக் குணப்படுத்த முடியாது. உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்குத் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறதோ அதைச் சரி செய்வதன் மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.
பொதுவாக, 50 விழுக்காடு சிறுநீரகச் செயலிழப்பு என நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று மருந்து மாத்திரை எனச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்களே, அவர்களில் யாருக்காவது 50 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு, 30 விழுக்காடு என்று திரும்ப வந்து சிறுநீரகம் குணமாகியிருக்கிறதா? சிகிச்சை அளிக்க அளிக்க 50 விழுக்காடு இருந்த நோய் 60 விழுக்காடு, 70 விழுக்காடு எனச் செல்கிறது. உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பது மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைப் புதுப்பிக்க முடியும். நமது சிகிச்சை முறையில் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட குறையை நீக்கிச் சிறுநீரகத்தைப் புதுப்பிக்கலாம். சிறுநீரகச் சம்பந்தப்பட்ட நோயாளிகள் நமது முறையைக் கையாளுவதன் மூலமாக மருந்து, மாத்திரை, டையாலிசிஸ் ஆகியவற்றை இரண்டு அல்லது நான்கு மாதத்திற்குள் படிப்படியாக நிறுத்தி முழுமையாகக் குணம்பெற முடியும். மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆக, உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உணவு சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாகக் கல்லீரலைக் குணப்படுத்தலாம். உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைக் குணப்படுத்த முடியும். உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாகத்தான் நுரையீரல் நோய்களையும் குணப்படுத்த முடியும். ஆகவே, முன்பே நாம் இத்தொடரில் பார்த்தபடி, தனித் தனி உறுப்புகளுக்குத் தனித் தனிச் சிகிச்சை கிடையாது. இதயத்தில் ஒரு நோய் வந்தால் இதயத்தை மட்டும் ஸ்கேன் செய்து பார்த்து அதற்குச் சிகிச்சை கொடுக்க முடியாது. ஏனென்றால், இதயத்துக்குத் தேவையான உணவைக் கல்லீரல் கொடுக்கிறது. கல்லீரலில் ஒரு குறை என்றால் இதயம் ஒழுங்காக வேலை செய்யாது. இதயத்துக்குத் தேவையான நீரைச் சிறுநீரகம் தருகிறது. எனவே, சிறுநீரகத்தில் ஏதாவது நோய் என்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும். இதயத்துக்குத் தேவையான காற்றை நுரையீரல் அளிக்கிறது. நுரையீரலுக்கு ஏதாவது நோய் என்றால் இதயம் கெட்டுப் போகும். இப்படி, நம் உடம்பில் அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து கூட்டாகத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, பாதிக்கப்பட்ட உறுப்புக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை சாப்பிட்டு, அதைப் பற்றிக் கவலைப்பட்டு அதைக் குணப்படுத்த முடியாது. உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உள்ள நோயைக் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே உடம்பிலுள்ள சிறு சிறு உறுப்புகளையும் சரி செய்ய முடியும். எனவே, இனி தனித்தனி உறுப்புகளுக்குத் தனித் தனி மருத்துவத்தைத் தேடாதீர்கள்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author