அனாடமிக் தெரபி (22) -பித்தப்பையில் கல்

பித்தப்பையில் கல்

சர்க்கரை நோயாளிகளே! சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்களும் உடனே பித்தப்பையை எடுத்து விடுவீர்கள்.

பித்தப்பை (Gall Bladder) என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்குப் பித்த நீர் சுரக்க வேண்டும். அதை அனுப்புவது அதுதான். கல்லீரல் இரத்தத்திலுள்ள 80% கொழுப்பை எடுத்துப் பித்த நீராக (BILE) மாற்றிப் பித்தப்பையில் சேமிக்கிறது. இப்படி அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டால் பித்தப்பை இருப்பவர்களுக்கே ஒழுங்காக ஜீரணமாகாத இந்தக் காலக் கட்டத்தில் அது இல்லாத ஒருவருக்கு எப்படி ஜீரணம் ஒழுங்காக நடக்கும்? எனவே, பித்தப்பையின் வேலையைக் கல்லீரல் செய்ய வேண்டியது இருக்கும். எனவே, கல்லீரலுக்கு அதிக வேலை.

கர்ப்பப்பையில் கட்டி
அதேபோல், கர்ப்பப்பையில் கட்டியென்று வெட்டி எடுக்கச் சொல்வார்கள். கர்ப்பப்பை என்ன வேலை செய்கிறது? உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இப்படிக் கர்ப்பப்பையை வெட்டியெடுத்து விட்டால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது யார்? அந்தக் கழிவுகளை வியர்வை, சிறுநீர்ப் பை போன்றவை வெளியேற்றும். அப்பொழுது அந்த உறுப்புகளுக்கு அதிகமான வேலை.

நமது வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் ஒன்று சேர்ந்தால் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.
"நீ உன்னோடத வெட்டி எடுத்திட்டியா? நான் என்னோடத வெட்டுவதற்கு அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன்” என்று. நீங்கள் என்ன பிக்னிக்கா போகிறீர்கள்? ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு எதற்கு மருத்துவர்?

அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)

குடல் வால் (APPENDIX) வலிக்கிறது என்று கூறினால் அதை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது. உடலில் வலப் பக்கம், இடப் பக்கம் இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. குடல்வால் எடுத்தவர்கள் மலை மேல் ஏறும்போது அவர்களால் பாலன்ஸ் செய்ய முடியாது. இடது, வலது பக்கங்களை அவர்களுக்கு பேலன்ஸ் செய்துகொள்ளத் தெரியாது. ஆனால், மருத்துவ உலகம் கூறுகிறது, குடல்வால் என்ற உறுப்பு தேவையேயில்லை என்று. நமது உடலில் ஒரு உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுதே என்ன அர்த்தம்? கடவுள் முட்டாள் என்று அர்த்தம். கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா இல்லையா என்று தெரியாதா? குடல்வால் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அந்த உறுப்பு என்ன செய்கிறது என்பது அவருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்யவில்லை என்பதில்லை.

இப்படி நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் மருத்துவம். நமது சிகிச்சையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாகப் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல்வால் அழற்சி என எந்த உறுப்பில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பைப் புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author

1 Comment

  1. vettriyarasan

    கடவுள் எல்லாவற்றையும் நன்கு கவனித்து தான் மனிதனை படைத்தான். ஆனால் மனிதன் படைத்தவனுக்கே பாயாசம் போட்டு பாசாங்கு செய்கிறான். ஆண்டவனில் படைப்புகளில் அர்த்தம் உள்ளது என எதையும் யோசிக்கமாட்டான். பணம் வருகிறது என்றால் பிணத்தைக்கூட தின்னுவான். நல்லா சொன்னீங்க மருத்துவத்தின் மூலம் சரி பார்கனுமே அன்றி உறுப்புகளை அகற்றுவதன்று.

Comments are closed.