அனாடமிக் தெரபி (60)

2. குடிநீரை பில்டர் செய்யக்கூடாது!

நம் வீடுகளில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு வாட்டர் பில்டர் கருவிகளை வைத்திருக்கிறோம். இவற்றில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்தது, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் தூசோடு இருக்கும். உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசு கீழே கொட்டும். நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ‘நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்தத் தூசு நம் உடம்பிற்குள் செல்லவில்லை’ என்று. ஆனால், நான் என்ன நினைப்பேன் என்றால் ‘இந்தத் தாதுப்பொருட்கள் வீட்டில் உள்ள மனிதர்களுக்குள் செல்லவில்லையா? அப்படியானால், அவர்கள் நோயோடு இருப்பார்கள்’ என்று நினைப்பேன்.

பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கித் தண்ணீரிலிருந்து பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே? அவை தூசு அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசியத் தாதுப் பொருட்கள்!

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் இந்தத் தூசு கண்ணுக்குத் தெரியாது. பில்டரைப் பயன்படுத்தினால் மட்டுமே அவை வெளிவரும். கொத்து புரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம், கண்ணுக்கே தெரியாத அந்தச் சின்னஞ் சிறிய தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்?

யார் யாருடைய வீட்டிலெல்லாம் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் இரத்தத்தில் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்தத் தூசை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப்பொருட்களை பில்டர் செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

எனவே, தண்ணீரை பில்டர் செய்யக்கூடாது! அதனால் மனிதர்களுக்கு நோய்தான் வரும்.

3. பாட்டில் குடிநீரை (bottled mineral water) குடிக்கலாமா?

தூய்மையாக்கப்பட்டு பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரைக் குடிக்கக்கூடாது!
இவற்றைத் தயாரிக்கும் குடிநீர் ஆலைகளில் Anti Scale Dosing machine என்று ஓர் இயந்திரம் இருக்கும். இதன் வேலை தண்ணீரில் உள்ள தாதுப் பொருட்கள் அனைத்தையும் எடுத்து விட்டுச் சப்பைத் தண்ணீராக மாற்றுவது. நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத தண்ணீராக மாற்றுவதற்குப் பல வேலைகளைச் செய்து அதை பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள்; நாமும் அதைப் பணம் கொடுத்து வாங்கி அருந்துகிறோம்.

எனவே, தயவு செய்து பாட்டில் குடிநீரை யாரும் உட்கொள்ள வேண்டாம்!

4. குடிநீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறை!

தண்ணீரைக் கொதிக்க வைக்கக்கூடாது; பில்டர் செய்யக்கூடாது; பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரையும் குடிக்கக்கூடாது; வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாகப் பைப்பில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய்த் தண்ணீர்தான்! யார் ஒருவர் குழாய்த் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்தக் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே அருந்துங்கள்!

அதை எப்படிக் குடிப்பது? குழாய்த் தண்ணீரில் தாதுப்பொருட்கள் – TDS – அதிகமாக இருக்குமே, சாக்கடை நீர் கலந்து வருமே என்றெல்லாம் மனதில் தோன்றும். எங்கள் ஊர்த் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்றவற்றின் மூலமாகத் தெரிந்து கொண்டோம் என்றும் பலர் கூறுகிறீர்கள்.

அப்படிப்பட்ட நிலைமையில் இருப்பவர்கள் நான் கூறுவது போல உங்கள் தண்ணீரை இயற்கையான முறையில் சுத்திகரிக்கலாம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author