அரிசி மாவு ரொட்டி

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 அரைக்கால்
தண்ணீர் – 2 கப்
உப்பு – அரை தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வறுத்த கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
ஜீரகம், மிளகு இரண்டும் சேர்த்து பொடித்தது – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.

இறக்கி வைத்து நன்றாகப் பிசைந்து மெல்லிய ரொட்டிகளாகத் தட்டி சுடவும். இந்த ரொட்டியை தனியா சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

About The Author