இராசி பலன்கள் (4-8-2008 முதல் 10-8-2008 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு
உள்ளது. தீராத நோய்க்கு விடை காணுவீர்கள். தாய்க்கு உடல் நிலை பாதிக்கும். தந்தை வழிச் சொத்துக்கள் மற்றும் வர வேண்டிய பணம் கைவந்து சேரும். பொது நலத் தொண்டு நிறுவனத்தவர் நற்பலன் அடைவார்கள். தலை, முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் பொருட் செலவு உண்டாகும். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்தல் நன்று.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்கு இருக்கும். தூரத்து யாத்திரைகளைத் தள்ளிப் போடவும். உறவினர் வருகையால் பணச் செலவுகள் ஏற்படும் காலமாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம், சொத்து ஏமாறாமல் இருக்கவும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் நன்மையடைவீர்கள். தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். கண்களில் கவனம் தேவை.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். காண்ட்டிராக்ட், தரகுத் தொழில் செய்வோர் லாபம் அடைவர். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி புரிவோர் நற்பலன் அடைவார்கள். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லது. திருட்டுப் போன பொருள் கிடைக்கும். பங்காளியால் ஆதாயம் இல்லை. அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். மனைவியால் பொருள் வரவு உண்டு. தீராத வியாதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடை காணுவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் மனம் உவந்து பணியாற்றுவீர்கள்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவீர்கள். செல்வந்தர்களால் ஆதாயம் உண்டு. சகோதரர் குடும்பத்தால் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பேப்பர், புத்தகம், பிரிண்டிங் தொழில் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரலாம். கலைஞர்களுக்குப் பரிசுகள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீண் பொருட்செலவுகள் உண்டாகலாம். தீர்த்த யாத்திரைகள் மற்றும் உல்லாசப் பயணம் சென்று வரக் கூடிய காலமாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். வழக்குகள் மூலம் வரவேண்டிய பணம் மற்றும் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. கலைத்துறை மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் லாபம் அடைவர். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். காதல் விஷயங்களில் எச்ரிக்கை தேவை. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்காக முயற்சி செய்வீர்கள். மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் சில அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகளால் தனவரவு உண்டு. புகையிலை, மது, மற்றும் கமிஷன் தொழில் செய்வோர் லாபம் அடைவார்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவருக்காக ஜாமீன் போட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வீடு மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை. உடம்பில் இரத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். உறவால் பொருட் செலவு உண்டாகும். ஸ்டேஷனரி ஷாப் மற்றும் தபால், தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். வராத கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வரும். புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அயலாரிடம் கவனமுடன் பழகி வரவும். தேவைவயான பணம் கிடைக்கும். மற்றவர் நடத்தும் தொழில் ஸ்தாபனங்களில் பெரிய பதவிகள் கிடைக்கும். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டால் பிரச்சினைகள் வரலாம். எனவே முன் கோபம் தவிர்த்தல் நல்லது. ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. மாமன் வழியின் மூலம் புதிய பிரச்சனைகள் உருவாகும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்களுக்குப் புதிய பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு இட மாற்றம் அல்லது பதவி உயர்வு ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகலாம். தந்தைக்கு உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் மூலம் பிரிவு ஏற்படக்கூடிய காலமாகும். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து நீங்கும். சகோதர சகோதாரர்களுக்குள் மனக் கசப்பு ஏற்படலாம். தொலைதூரப் பயணம் வெற்றியளிக்கும். வீடு மாற்றம் உண்டாகும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். பெண்களால் பிரச்சினைகள் உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக அவமானப்படக்கூடிய பழிச் சொல் உருவாகலாம். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. போலீஸ், ராணுவத்துறை, தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கம்யூட்டர், இணையதளம், தொலைக்காட்சி நடத்துவோர் லாபம் அடைவார்கள். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், பற்கள் சம்பந்தமான தொல்லைகள் வந்து நீங்கும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் திருப்திகரமான நிலையில் உள்ளது. கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை. உறவுகள் பலப்படும் காலமாகும். இரும்பு, இயந்திரம், எண்ணை வியாபாரம் செய்வோர் நற்பலன் அடைவார்கள். தொலைத் தூரப்பயணம் விலக்கவும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் புதிய பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத் துறையினருக்கு சில இடையூகள் வந்து விலகும். செய்தொழிலில் லாபம் உண்டாகும். தென் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் இல்லை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கடன் தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும். நண்பர் ஒருவார் உதவியால் புதிய கடன் வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும். யாத்திரைகளில் எச்சரிக்கை தேவை. உடம்பில் வயிறு, குடல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். விருந்தினா வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தீர்த்த யாத்திரை சென்று வரக்கூடிய வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி பயக்கும். வீடு மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி உண்டாகும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஆஞ்சனேயர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சினைகள் ஏற்படலாம். பூ, பழம், நறுமணப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். சினிமா மற்றும் நாடகத் துறையினர் கவனமுடன் செயல்படவும். கேளிக்கை விநோத விளையாட்டுக்காகப் பணச் செலவு உண்டாகும். பழைய வீட்டை திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். உப்பு வியாபாரம், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தள்ளிப் போடவும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சூரிய வழிபாடு செய்து அன்னதானம் செய்யவும்.”

About The Author