கவின் குறு நூறு-12 (33-35)

33

குறும்புச் சிம்மாசனத்தில்
கொலு வீற்றிருந்த கவின்
பொம்மைகள் உலகத்தில் கலவரம்
இல்லாமல் பார்த்துக் கொள்கிறான்.

34

பத்திரிகை வந்தவுடன் யாரும்
படிக்கும் முன்பே
கிழித்து விடுகிறான் கவின்.
படித்துக் கிழிப்பவர்கள்
பழிக்க முடியவில்லை அவனை.

35

என் பேரனுக்கு எப்போதும்
நாலு மட்டும் தான் தெரியும்
இனிப்பை அதற்குத் தடவி
‘ நாவு’ என்பான்
எல்லா எண்களுமே அந்த
‘ நாவுக்குள்’ வந்து
பூரித்துப் போகின்றன.

About The Author