கவின் குறு நூறு-29

84

விடுதல் அறியா விருப்போடு
‘என் செல்வமே’ என்று
கொஞ்சிய பாட்டி தன்
காதுக் கம்மலைக் கவினிடமிருந்து
விடுவிக்கப் படாத பாடு.

85

பாட்டு வராத இடத்தில்
வானொலிப் பெட்டியை இயக்கிவிட்டுப்
பாடினான் கவின்.

86

எட்டாத உயரத்தில்
எல்லாவற்றையும் வைத்தாயிற்று;
கவின் கையில் இப்போது
ஒட்டடைக் கொம்பு!

87

அப்பாவின் சட்டையைப்
போட்டுக் கொண்டவன்
அப்பாவைத் தேடினான்
பள்ளிக்கு அனுப்பிவைக்க.

About The Author