குளு குளு க்யூகம்பர்

சில வாரங்களுக்கு முன்னால டைம்ஸ் நாளிதழ்ல வெள்ளரிக்காயின் பயன்களைப் பத்தி எழுதியிருந்தாங்க. நமக்குத்தான் வெயில் போடு போடுன்னு போடுதே, படிச்சுப்பாக்கலாம்னு பாத்தா, கோடைக்கு உடலுக்கு மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் பல வகையான பிரச்சனைகளுக்கு இந்த வெள்ளரி ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.

1. நமது உடலிற்குத் தினசரி தேவைப்படும் வைட்டமின்களில், பெரும்பான்மையானவைகள் வெள்ளரிக்காய்களில் இருக்கிறது. ஒரு வெள்ளரிக்காயில் மட்டும் வைட்டமின் B1,B2,B3,B5,B6, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய இத்தனையும் இருக்கிறதாம்.

2. மதிய நேரங்களில் களைப்பாக இருந்தால், களைப்பை விரட்ட வெள்ளரிக்காயை கேஃபின்(caffine / coffee) உள்ள சோடாவோடு சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் B பேமிலியும், கார்போஹைட்ரேட்ஸும் இழந்த களைப்பைப் போக்க உதவுகின்றன.

3. பனிக்காலத்தில் பாத்ரூம் கண்ணாடிகளில் குளித்த பிறகு ஏற்படுகின்ற பனிப்படலத்தை நீக்க, ஒரு வெள்ளரித்துண்டை வைத்து அந்தக் கண்ணாடியைத் துடைத்தால் பனிப்படலமும் நீங்கி ஒரு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.

4. வீட்டில் உள்ள பூச்செடிகள் மற்றும் குரோட்டன்ஸ் ஆகியவற்றில் சிறிய புழு, பூச்சிகளின் தொந்தரவுகள் இருக்கிறதா? கவலையை விடுங்கள்! பிஸ்கெட்டுகள் வரும் அலுமினிய டப்பாக்களில் வெள்ளரித் துண்டுகளைப் போட்டு வைத்தால் புழு,பூச்சி எதுவுமே அருகில் நெருங்காது. வெள்ளரிக்காய்களில் உள்ள வேதிப் பொருட்கள் அலுமினியத்துடன் ரசாயன மாற்றம் நிகழ்த்துவதால் மனிதர்களால் உணரமுடியாத ஒருவித மணம் உண்டாகிறது. இந்த மணம் புழு மற்றும் சிறிய பூச்சிகளை விரட்ட உதவுகிறது.

5. நீச்சல் குளங்களில் குளிப்பதற்கு முன்னால் உடல் தசைகள் வலுவாக, இறுக்கமாக இருந்தால் நன்றாக நீந்த முடியும். அவ்வாறு இறுக்கமாக இல்லாத இடங்களில் இந்த வெள்ளரித் துண்டுகளை நன்றாகத் தேய்த்தால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் தோலுடன் இணைந்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தைத் தருகின்றன. தோலின் சுருக்கங்களைப் போக்குவதற்கும் வெள்ளரி உதவுகிறது.

6. நீங்கள் காலை நேரத் தலைவலியால் பாதிக்கப்படுவரா? கவலையை விடுங்கள். இரவில் படுக்கப் போகும்முன் வெள்ளரிக்காய்களை உண்டால் காலையில் தலைவலி ஏதுமில்லாமல் மிக புத்துணர்வோடு எழுந்து கொள்ளலாம். வெள்ளரிகளில் தேவையான அளவு சர்க்கரை இருக்கிறது. மற்றும் அதில் உள்ள B வைட்டமின்கள், எலக்ட்ரோலைட் ஆகியவை உடல் இழந்த சத்துகளை சரிசெய்து எல்லா சத்துகளும் சம அளவில் இருப்பதற்கு உதவி செய்கிறது. இதனால் ‘குடி’ப்பதால் காலையில் ஏற்படும் தலைவலியைத் தவிர்க்கலாம்.(‘குடி’மக்களே! கவனியுங்கள்)

7. நம்மில் பலருக்கு எப்பொழுதும் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதை தவிர்க்க நினைத்தாலும் அவர்களால் இயலாது. இந்த வெள்ளரிக் காய்களை சாப்பிட்டு வந்தால் வயிறு நிரம்பியது போல உணர்வு ஏற்படுவதால் நொறுக்குத் தீனியைக் குறைக்க முடியும். ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

8. முக்கியமான மீட்டிங்கா? புதிய வேலைக்குச் சேரும் இண்டர்வியூவா? ஷூக்களுக்கு பாலிஷ் போடுவதற்கு நேரமில்லையா? இரண்டே நொடிகள்தான். வெள்ளரித்துண்டுகளை ஷூக்கள் மீது நன்றாகத் தேய்க்கவும். அதில் உள்ள கெமிக்கல்ஸ் உங்கள் ஷூக்களுக்கு நல்ல பளபளப்பையும் தண்ணீரை உறிஞ்சாத தன்மையையும் கொடுக்கிறது.

9. கதவுகள், ஜன்னல்கள் சத்தம் போடுகின்றனவா? உடனே நாம் எடுப்பது WD 40 இல்லைன்னா ஆயில். இதைத் தவிர வேறெதுவும் இல்லையா? ஏன் இல்லை? நம்ம வெள்ளரித்துண்டை எடுத்து அதில் தேய்த்தால், சத்தம் போயே போச்சு, போயிந்தி, இட்ஸ் கான்.

10. மன அழுத்தத்தைப் போக்க வேண்டுமா? மசாஜ், ஃபேசியல், ஸ்பா இவற்றுக்கெல்லாம் போவதற்கு நேரமில்லையா? கொதிக்கும் தண்ணீரில் வெள்ளரித்துண்டுகளைப் போடவும். வெள்ளரிகளில் உள்ள கெமிக்கல்ஸும் வைட்டமின்களும் கொதிநீருடன் வேதிவினை புரிந்து நீராவியை வெளிப்படுத்தும். அந்த நீராவியை உள்ளிழுத்து சுவாசித்தால், டென்ஷன் போயே போய்விடும். (படிக்கிற புள்ளைங்களா! எக்ஸாம்க்கு முன்னாடி டென்ஷனா? இதை ட்ரை பண்ணுங்க)

11. பெரிய விருந்தா? பலமா சாப்பிட்டீங்களா? வாய் ஃப்ரெஷ்ஷா இருக்க மிண்ட் தேடுறீங்களா? இதை ட்ரைப் பண்ணிப் பாருங்க. வெள்ளரித் துண்டை , தொண்டையின் மேல் பாகத்தில் வைத்து, நாக்கினால் ஒரு 30 செகண்ட்ஸ் அழுத்தினால், வாய் துர்நாற்றம் ஓடியே போகும். மேலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களையும் இது கொல்கிறது.

12. உங்கள் ஸ்டீல் பாத்திரங்கள், சிங்க் ஆகியவற்றை இயற்கை முறையில் சுத்தம் செய்ய வேண்டுமா? வெள்ளரித்துண்டுகளை எடுத்து அதில் தேய்த்தால் நாள்கணக்காய்ப் படிந்துள்ள அழுக்கை அகற்றுவதோடு, நல்ல பளபளப்பையும் தருகிறது. கீறல் இல்லை, கைகளுக்கும் விரல்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. (கிளீனிங் கம்பெனிக்காரங்க எல்லாம் ஒண்ணா சேந்து என்னை அடிக்க வர மாதிரி இருக்கு)

13. குட்டீஸ் க்ரயான்ஸ், மார்க்கெர்ஸ் வெச்சு சுவரெல்லாம் விளையாடிடாங்களா? வெள்ளரித்தோலை வைத்து க்ளீன் செய்து பாருங்கள். பேனாவில் எழுதியதை அழிப்பதற்கும் இது உதவுகிறது. பேப்பரில் அழிப்பதானால் மிக மென்மயாக பயன்படுத்த வேண்டும்.

நட்புடன்
தேவிராஜன்

About The Author