கொலைவெறி தமிழா!

சங்கங்கள் முழங்கட்டும்
பறைகள் அதிரட்டும்
பேரிரைச்சல் பெருகட்டும்
இடி வானைப் பிளக்கட்டும்
வெள்ளம் கரை புரளட்டும்
வெப்பம் வாட்டட்டும்
குளிர் கூத்தாடட்டும்
விண்கற்கள் வீழட்டும்
சகதமிழன் சாகட்டும்
மாற்றான் விரட்டட்டும்
துரோகம் தொடரட்டும்
நம் சொந்தங்கள் அலறட்டும்
வீரம் மண்ணில் புதையட்டும்
இவையனைத்தும் நடைபெற்றும்
விழிக்காத தமிழா!
கொலைவெறி கொண்ட
ஆங்கிலப் பண்ணால்
விழித்ததேன் தமிழா!!

About The Author