சினி சிப்ஸ்

இயக்குனராக முயல்கிறார் சிம்ரன்

"சினிமா துறைக்கு வந்த நாளிலிருந்து திரைப்படங்கள் இயக்கவேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. விரைவில் அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்கிறார் சிம்ரன். லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்திட அவரை அணுகியிருப்பதாகத் தெரிகிறது.

*****

‘கந்தசாமி’ பத்திச் சொல்றாங்க..

ஏழை ஒருவனின் பணக்காரனாகும் ஆசை நிறைவேறினால் எப்படி இருக்கும் என்பதுதான் கந்தசாமியின் கதை என்கிறார் இயக்குனர் சுசி கணேசன். படத்தில் இந்திய ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்திருப்பதாகக் கூறுகிறார் விக்ரம். மற்ற தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களைப் போல அல்லாது ஹாலிவுட் படங்களுடன் இந்தப் படம் ஒப்பிடப் படும் என்று கூறியிருக்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஏகப்பட்ட பில்டப்பா இருக்கேப்பா!

*****

ஜான் இயக்கத்தில் நடிக்கும் ஜீவன்

ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜான் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜீவன். இவரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ‘சச்சின்’. ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஜான் இயக்குனர் மகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

வெளியீட்டுக்குத் தயாராகும் ‘அபியும் நானும்’

டூயட் மூவீஸ் மற்றும் மோஸர் பியர் இணைந்த தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் படம் ‘அபியும் நானும்’. பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா நடிக்கும் இதன் படப்பிடிப்பு ஊட்டி, மூணாறு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

*****

83 இடங்களில் படமாக்கப்பட்ட படம்

‘ராமன் தேடிய சீதை’ படத்தின் கதை பயணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால், 60 காட்சிகள் 83 இடங்களில் படமாக்கப்பட்டுள்ளனவாம். இப்படத்தின் பெரும் பகுதி நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் ஜகன்னாத். நாயகன் சேரனுக்கு ஐந்து கதாநாயகிகள் (விமலா ராமன், கார்த்திகா, நவ்யா நாயர், ரம்யா நம்பீஸன், கஜாலா).

*****

About The Author