ஜோதிடம் கேளுங்கள்

என் வேலை, திருமணம் பற்றி சொல்லுங்கள். என் பெற்றோர் உடல்நலம் நன்றாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? எதிர்காலத்தில் நான் அவர்களோடு சேர்ந்து வசிக்க வாய்ப்பு வருமா? – ஆர். சிவராமகிருஷ்ணன்,கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சிவராம கிருஷ்ணன் அவர்களே !

37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி ராசி மீனம். லக்னம் விருச்சிகம். மே 2012, குரு பகவான், தங்கள் லக்னத்திலிருந்து 7-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு மாறி, ஓராண்டு அங்கு தங்குகிறார். இந்தக் காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு வேலை, அதற்குப்பின் திருமணம் இரண்டும் கை கூடிவிடும். பெற்றோரின் ஆரோக்கியத்திற்கு, தன்வந்த்ரி பகவானை வழிபடவும். வருங்காலத்தில், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வசிக்கலாம். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருப்பதால், காரியங்கள் தடையின்றி நடைபெற, வெள்ளிக்கிழமை நாக தெய்வத்தை வழிபடவும். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***************

என் நட்சத்திரம், ராசி என்ன என்று சொல்லவும். – ஜி. சந்துரு, வடக்கன்குளம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சந்துரு அவர்களே !
6 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி, துலாம், லக்னம் மகரம் ஆகும்.

****************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.”

About The Author