ஜோதிடம் கேளுங்கள்

நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். என் படிப்பு சார்ந்த வேலை செய்ய விரும்புகிறேன். இது வரை நல்ல வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது எனக்கு நல்ல வேலை கிடைக்கும்? என்னுடைய மனைவி இந்தியாவில் இருக்கிறார். எப்பொழுது என்னுடன் சேர்வார்? பாலாஜி, வேலூர்.

அன்புடையீர், வணக்கம். தங்களுக்குத் தற்போது வயது 30 ஆகிறது. தநுசு லக்கினம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியிற் பிறந்துள்ளீர்கள்.

2க்கு உடைய கல்வி ஸ்தானாதிபதி சனி 2க்கு 7ம் இடத்தில் மறைந்துள்ளதால் இது வரை தாங்கள் படித்த படிப்பால் எந்த லாபமும் இல்லை.

கோசாரப்படி ராசிக்குப் 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்து வருவதால் நிரந்தர வேலை இல்லாமல் இருக்கிறீர்கள். மேலும் ஜாதகத்தில் 10ல் ராகு உள்ளதால் இன்னும் ஒரு ஆண்டிற்குப் பிறகே நிரந்தர வேலை கிடைக்கும்.

தனுசு லக்கினத்திற்கு 7ல் குரு அமர்ந்து 7க்கு அதிபன் 12ம் இடத்தில் மறைந்துள்ளதால் கணவன், மனைவி இருவரும் நீங்கி இருக்கிறீர்கள். வருகிற 2009 ஜனவரிக்கு மேல் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் கிழமை விரதமிருந்து, துர்க்கை வழிபாடு செய்து வரவும். வலது கையில் புஷ்பராகக் கல் பதித்த மோதிரம் போட்டுக் கொள்ளவும்.

*****

About The Author

4 Comments

  1. Charles Kingsley

    ணான் 1954ம் ஆன்டு ஜுல்ய் மாதம் 16ம் திகதி முன் பகல் 11.35 மனிக்கு வெல்லிகிலமை பிரந்தென். எனது ஜொதிட கனிப்பை கோரவும்.

Comments are closed.