தக்காளி தொக்கு

தேவையானவை :

பழுத்த தக்காளி – 7
வெங்காயம் – 5
பூண்டு – 15 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகாய்த் தூள் – 2 மேசைக்கரண்டி
கொத்துமல்லித் தழை – ஒரு கை பிடி அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சோம்பு தாளித்து, பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி மற்றும் பூண்டினை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்பு தக்காளி, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு சுருள கிளறி கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை தூவி இறக்கிவிடலாம்.

சுவையான தக்காளி தொக்கு தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author