பாபா பதில்கள்

Q. நாங்கள் எங்கே இருந்தாலும் உங்களால் உதவ முடியுமா?

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை முப்பது அடி தள்ளி உட்கார்ந்து கொண்டு remote வைத்து on பண்ண முடியும், off பண்ண முடியும், sound கூட்ட முடியும், sound குறைக்க முடியும், channel மாற்ற முடியும். தொலைக்காட்சிப் பெட்டி ஒரு plastic டப்பா. Remote ஒரு plastic டப்பா. அந்த plastic டப்பாவை வைத்து உன்னால் இவ்வளவு வேலைகள் செய்ய முடியும் என்றால், என்னுடைய ஸ்தூலம் அதை விட மோசமான டப்பாவா என்ன?

என்னால் உன்னை operate பண்ண முடியும். ஆனால் நீ என்னை பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி என்னை பிடித்துக் கொண்டாய் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் என்னால் உனக்கு help பண்ண முடியும். நீ தண்ணீரில் முழுகுகிறாய் என்றால் அந்த நேரத்தில் என்னை நினை. அங்கே இருக்கும் ஏதாவது ஒரு உடம்பிற்குள்ளே நுழைந்து நான் காப்பாற்றி விடுவேன்.

About The Author