பாபா பதில்கள்

Q. "நான் என்பது மறைந்து நீயாக வேண்டும்", என்று ஒரு பாட்டு இருக்கிறது. நான், நீ how to compare? ஏது நான்? எது நீ?

Siva Shankar Babaஅந்த நானுக்குள்ளே நீ இருக்கிறது. அந்த நீயுக்குள்ளே நான் இருக்கிறது. அது புரிந்துக் கொள்வதற்காக சொல்கிற வாக்கியங்களே தவிர, நிஜமாக உலகத்திலே இரண்டாவது வஸ்து கிடையாது. உலகத்திலே எல்லார் கிட்டேயும் அதேதான் இருக்கிறது. ஒரே ஒரு waterதான் உலகத்திலே இருக்கிறது. ஆனால் அந்த waterக்கு, நாம் தான் புரிந்து கொள்வதற்காக பசிபிக் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம் Red sea, Black sea, Dead sea, Atlantic ocean. There is no second thing in this world. There is only one thing. And the same thing is in every one and every thing. "ஈஸ்வர சர்வ பூதானாம்". நானும் நீங்களும் மாத்திரம் இல்லை. பல்லி, கோழி, ஆடு, மாடு, ஓணான் கூட அதே தான். உலகத்திலே இரண்டாவது வஸ்து என்பது இல்லவே இல்லை.

About The Author