பொட்டுக்கடலை மாவு உருண்டை

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை – 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
பொடித்த ஏலக்காய் – 4,
நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி – 6,
நெய் – 50 கிராம்

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் அடித்து நைஸாக பொடித்து, பின் சலித்து வைத்துக் கொள்ளவும். சலித்த பொடியுடன், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி, நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும். பொட்டுக்கடலை மாவு உருண்டை தயார்.

About The Author