போதி மரம்

இளைஞனே
இன்று உன் தோளை
இரவல் கொடு !

ஒரு
போதிமரத்தைச் சுமந்து
பொடி நடையாய்
போக வேண்டும் !

அதனை
இலங்கை மண்ணில்
நட்ட நடுநாயகமாய்
நட்டு வர வேண்டும் !

என்றாவது ஒரு நாள்
எழுந்து வர மாட்டானா
இன்னொரு புத்தன் ..?

அகிம்சையை போதிக்க..

(“போன்சாய்” என்ற கவிதை தொகுப்பிலிருந்து
வெளியீடு : கலைஞன் பதிப்பகம் – சென்னை)

About The Author

1 Comment

Comments are closed.