மடை திறந்து… (38)

என்னப்பா, பொங்கலெல்லாம் நல்லாப் போச்சா? நாங்க வழக்கம் போல நண்பர்களோட நல்லா கொண்டாடினோம்… (படம்)

கடந்த சில வாரங்களா, வழக்கம் போல கஷ்டங்கள் பல பட்டு நிறைய கத்துக்கிட்டேன். ஏன், எதுக்குன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னால கடகடகடன்னு பல பாடங்கள். ஒரு நாள் வெறுத்துப் போய், ‘அட போங்கப்பா, இனி மேல் நான் என்னோட வாழ்க்கையை வளமாக்கறதுக்காக முயற்சி செய்யப் போறதில்லை. நீங்களே நடத்துங்க’ன்னு பிரபஞ்சத்துக்கிட்டே சொல்லிட்டு, திடீர்னு பாண்டிச்சேரி அன்னை நினைவு வரவும் ‘சரிம்மா… இன்னைக்கு என்னோட வாழ்க்கைய நடத்த வேண்டியது நீங்கதான். நான் இன்னைக்கு எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன்’னு ஒரு டீல் போட்டேன்.

அன்னிக்கு அலுவலகத்தில ஒரு தொலைபேசி உரையாடலைக் கேட்டுட்டு இருக்கும்போது என்னை அறியாம இன்ஃபினிடி குறி வரைய ஆரம்பிச்சேன். பின்னே அலுவலகத்திலிருந்து திரும்ப வரும்போது இந்த குறி வரையணும் போல தோணுச்சி. ‘இன்னைக்கு நானா எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன்னு சொல்லிருக்கேனே’ன்னு நினைச்சப்போ ‘இது பிரபஞ்சத்திலேர்ந்து வர்ற செய்தியா ஏன் இருக்கக் கூடாது?’ங்கற செய்தி வந்தது. சரின்னு எடுத்து வரைய ஆரம்பிச்சேன். ஒரு அரைப்பக்கத்துக்கு வரைஞ்சிட்டுப் பார்த்தப்போ எப்படி இந்தக் குறி ஒருத்தரோட வாழ்க்கையைப் பற்றிய அவரது உணர்வைக் குறிக்குதுங்கற தகவல்கள் வர ஆரம்பிச்சது. கிறுக்கலா குறிப்பெடுத்தேன்.

‘Hmmm… Interesting’ அப்படின்னு நினைச்சிட்டிருக்கும் போதே இந்தக் குறியை பயன்படுத்தி எப்படி வாழ்க்கையை வளமாக்கலாம்கற தகவல்களும் வர ஆரம்பிச்சது. ரொம்ப பிரமிப்பா இருந்தது. ஆனா வழக்கம் போல நாமதான் சந்தேகப் பிராணியாச்சே… இது உண்மையாவே அன்னை கொடுத்த செய்திதானா அல்லது நானே கற்பனை செய்துகிட்டதான்னு உறுதிசெய்யணும்னு நினைச்சு நான் சார்ந்திருக்கற ஒளி சேவகர்கள் குழுவில சாம்பிள் வேணும்னு கேட்டேன். பல சேவகர்கள் உடனே இன்ஃபினிடி குறி வரைஞ்சு அனுப்பிச்சாங்க. அதைப் பார்த்த உடனே அவங்களோட வாழ்க்கையைப் பற்றின அவங்க பார்வை எப்படி இருக்குன்னு தகவல்கள் கடகடன்னு வந்து விழுந்தது. அவங்களுக்கு அனுப்பிச்சு சரி பார்க்கச் சொன்னா, ‘பிரமிப்பா இருக்கு. கண்டிப்பா இது பிரபஞ்சத்திலேர்ந்து வந்ததுதான்’ன்னு பதில் அனுப்பிச்சாங்க. அன்போட ஒரு ஒளி சேவகர் நன்கொடை கூட வழங்கிருக்காங்க. எனக்கு நம்பிக்கை ரொம்ப சீக்கிரமாவே ஏற்பட்டுடுச்சு. இதை இப்போ வெளில எல்லாருக்கும் வழங்க ஆரம்பிச்சுட்டேன்.

ஒரே ஒரு நாள் என்னோட ‘Controlling behaviour’ஐ விட்டதுக்காக ஒரு புது சுகமளிக்கும் உத்தி உலகத்துக்குக் கிடைச்சிருக்குன்னா மொத்தமா நான் பிரபஞ்சத்துக்கிட்டே சரணாகதி ஆனா இந்த உலகமே சொர்க்கமாத் தெரியுமேன்னு தோணுது… ஆனா நமக்குள்ளே இருக்கற நாட்டாமை அவ்வளவு சீக்கிரமா அடங்கிருவாரான்னு தெரியலயே!

இன்ஃபினிடி குறியை அடிப்படையா வச்சு அமைஞ்ச இந்த உத்தியைப் பற்றி எனக்கு தகவல்கள் இன்னும் வந்தபடியே இருக்கு. இது ஒரு நூலா உருவாக வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன். இதுக்கு எனக்கு நிறைய நேரமும் மன அமைதியும் வேணும். உங்களோட அன்பும் அன்பமும் அனுப்பறீங்களா?

நான் முன்னமே சொன்னது போல, இனி என்னோட ஆன்மீக பகிர்தல்கள் ஆங்கிலத்தில இருக்கணும்னு எனக்குத் தோணுது. இது தற்காலிகமா கூட இருக்கலாம்… இந்தத் தூண்டுதல் கூட பிரபஞ்சம் கொடுத்தாப்பிலதான் இருக்கு. இன்னும் எங்கே எழுதறதுன்னு முடிவு செய்யலை. அநேகமா என்னோட பழைய வலைப்பூவிலேயே தொடர்வேன்னு நினைக்கறேன்:

http://light-guide.blogspot.com/

அதனால… விடை பெற்றுக்கறேன்பா…

"How lucky I am to have something that makes saying goodbye so hard."

But

"Goodbyes are not forever,
Goodbyes are not the end."

கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு கொள்ளலாம்:

எல்எல்ஜ.நிலா@ஜிமெயில்.காம்

http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663

http://groups.google.com/group/neyam

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

1 Comment

  1. T.S.Venkata Ramani

    எங்கியோ போய்க்கிட்டிருக்கீங்க நிலா! அது சரி, சுட்டின்னா என்ன?

Comments are closed.