மாந்துளிர் துவையல்

தேவையான பொருட்கள்:

மாந்துளிர் – ஒரு கையளவு
பெருங்காயம் – சிறிது
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
புளி – சிறிது,
சிகப்பு மிளகாய் – ஐந்து,
உப்பு – சுவைக்கேற்ப ,
தேங்காய்த் துருவல் – அரை கப் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை:

சிறிது எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு, சிகப்பு மிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் கழுவிய மாந்துளிரை மேற்கூறியவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். சுவையான மாந்துளிர் துவையல் ரெடி.

பின் குறிப்பு : இதே முறையில் பச்சை கொத்துமல்லியை உபயோகித்தும் செய்யலாம். பெரிய நெல்லிக்காயை உபயோகித்தும் செய்யலாம். நெல்லிக்காய் துவையலுக்கு பச்சை மிளகாய் உபயோகித்தால் சுவையாக இருக்கும்.

About The Author