மிளகுக் கறி மசாலா

தேவையான பொருட்கள்:

ஆட்டுக் கறி – 1 கிலோ
வெங்காயம் – 4
இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தக்காளி – 3
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
எலுமிச்சை – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்துமல்லி – தேவையான அளவு
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

பட்டை – 2
ஏலக்காய் – 4
மிளகு – 1 தேக்கரண்டி.
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கறியை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.

குக்கரை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றிப் பட்டை, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு, பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கவேண்டும்.

பிறகு, இஞ்சி-பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அப்புறம் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, பின்பு கறியையும் போட்டு மிதமான தீயில் கிளறுங்கள்.

பின்னர், தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு உப்பும் சேர்த்துக் கிளறிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி வேக விடுங்கள்.

மூன்று விசில் வந்தவுடன் நிறுத்தி விடலாம்.

கறியைத் தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

கடைசியாக மிளகுத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை தூவி இறக்க வேண்டும்.

சுவையான மிளகுக் கறி மசாலா தயார்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author