லக… லக… ஜோக்ஸ் (35)

வீட்டுக்காரி: உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே…?
பிச்சைக்காரன்: அட, என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க! பேஸ்புக்ல நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கோமே!

=============

மகன்: அப்பா! கடவுள் நம்ம செஞ்ச பாவங்களையெல்லாம் மன்னிக்கணும்னா என்ன செய்யணும்?
அப்பா: அதுக்கு முதலில் பாவம் செய்யணும்டா மகனே!

=============

சர்வர்: சார்! என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: என்ன நக்கலா? எதுவுமே கொண்டு வந்து கொடுக்காம என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்குறே?

=============

நண்பர் – 1: நான் புதுசா நாய் ஒண்ணு வாங்கியிருக்கேன். வந்து பார்க்கிறீங்களா?
நண்பர் – 2: அந்த நாய் கடிக்குமா?
நண்பர் – 1: அட, அதைத் தெரிஞ்சிக்கத்தானே உங்களையே கூப்பிடுறேன்! சும்மா வாங்க!

============

நபர் – 1: என்ன சார், என் பொண்ணு கல்யாணத்துக்கு வராம இருந்திட்டீங்களே?
நபர் – 2: என்ன இப்படி சொல்றீங்க? நான் வந்தேனே!
நபர் – 1: எங்க, உங்க பேரையே மொய் நோட்டுல காணோமே!

About The Author