லக… லக… ஜோக்ஸ் (56)

மாமியார் – 1: என் மருமக சரியான சோம்பேறி!

மாமியார் – 2: அப்படி என்ன செய்யறா?

மாமியார் – 1: ஒருநாள் கூட முழுசா சண்டை போடறதில்ல. போதும் போதும்னு பாதியிலேயே நிறுத்திக்கிறா.

*****

மாமியார் – 1: நேத்து என் ரெண்டு மருமகளுங்களுக்கும் சரியான சண்டை.

மாமியார் – 2: எதுக்காக?

மாமியார் – 2: எங்கூட யார் முதல்ல சண்டை போடறதுன்னுதான்.

*****

பெண் – 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.

பெண் – 2: எதனால அப்படி நினைக்கிறே?

பெண் – 1:
என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

*****

பெண் – 1: ரொம்ப நாளா சரியாக சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா.

பெண் – 2: யாரு?

பெண் – 1: நம்ப மீனாதான்.

*****

பெண் – 1: என்னது உன் வீட்டுக்காரரை அந்தப் பிரபல பாகவதர் கச்சேரிக்குக் கூப்பிட்டிருக்காரா? ஆச்சரியமா இருக்கே! எப்படி?

பெண் – 2: எல்லாம், அவர் எனக்குப் போட்ற ஜால்ராவைப் பார்த்துட்டுதான்.

*****

About The Author