லக.. லக… ஜோக்ஸ் (73)

நண்பன்-1: பால் வியாபாரம் ஆரம்பிச்சியே, எப்படி போகுது?

நண்பன்-2: ஏதோ, மாட்டு சொந்தக்காரன் கண்ல மாட்டாத வரைக்கும் பிரச்சனையில்

*****

வக்கீல்: மை லார்ட்! என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர். நேர்மையானவர். யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர். எல்லோரிடமும் அன்புடன் இருப்பவர்.

கட்சிக்காரர்: யோவ் வக்கீல்! என்ன விளையாடறியா? எங்கிட்டே காசு வாங்கிட்டு, யாரோ ஒரு ‘கட்சிக்காரனுக்காக’ பேசறியே! என்னப் பத்தி பேசுயா!

******

நண்பர்-1: வீட்டுக்கு ரெய்ட் வந்தவங்ககிட்டே ‘ஈ’ன்னு பல்லை காட்டீனாங்களாமே?

நண்பர்-2: அவங்கதான் ‘உங்க சொத்தையெல்லாம் காட்டுங்க’ன்னு சொன்னாங்க.

*****

நபர்-1: ரெண்டு நாளா என் பையனைக் காணோம்!

நபர்-2: அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்காதீங்க சார்! என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.

******

தொண்டன்: தலைவரே! உங்கள விசாரிக்க கமிஷன் அமைச்சிருக்காங்களாம்.

தலைவர்: அது சரி, அதிலேருந்து நமக்கு எவ்வளவு கமிஷன் தேறும்?

*****

About The Author