லக… லக… ஜோக்ஸ் (83)

நண்பன்-1: கல்யாணத்தில மொய் எழுதாம மறந்து வந்திட்டேன்.

நண்பன்-2: அப்ப நீ கல்யாண பரபரப்புல ‘மொய் மறந்துட்டே’னு சொல்லு!

==========

நண்பர்-1: என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலைகாட்ட முடியலை.

நண்பர்-2: அப்படி என்ன பண்ணிட்டான்?

நண்பர்-1: என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்.

==========

தொண்டன்-1: தலைவருக்கு எத்தனை மனைவி?

தொண்டன்-2: சட்டப்படி ஒண்ணு, ‘செட்டப்’படி ஏழு!

==========

தோழி-1: உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா… கேரட் அல்வான்னு சொல்லிட்டு வர்றியே, ஏன்?

தோழி-2: கேரட் அல்வான்னா உயிரையே விட்டுடுவேன்னு அவங்க சொன்னாங்களே!

==========

நீதிபதி: முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு. அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!

திருடன்: எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க. கொஞ்சம் கருணை காட்டுங்க!
==========

About The Author