வித வித ஐஸ்கிரீம்கள்

முதலில் <<இங்கே>> https://www.nilacharal.com/ocms/log/06171303.asp சொடுக்கி அடிப்படையான ‘சாதா ஐஸ்கிரீம்’ செய்முறையை அறிந்து கொள்ளுங்கள். அதன் பின், கீழ்வரும் செய்முறைகளைப் பின்பற்றி விதவித ஐஸ்கிரீம்களை நீங்கள் விருப்பம் போல் தயாரிக்கலாம்.

வெனிலா ஐஸ்கிரீம்:
முதலில் ‘சாதா ஐஸ்கிரீ’மைச் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெனிலா கஸ்டர்ட் பவுடர் இரண்டு தேக்கரண்டியும், சில துளிகள் வெனிலா எசென்சும் சேர்த்தால் சுவையான வெனிலா ஐஸ்கிரீம் தயார்.

பிஸ்தா ஐஸ்கிரீம்:
‘சாதா ஐஸ்கிரீ’முக்கான செய்முறையை அப்படியே பின்பற்றி, இறுதியில் ஊற வைத்து அரைத்த பிஸ்தா அல்லது சிறு துண்டுகளாக நறுக்கிய பிஸ்தாப் பருப்புகள், பிஸ்தா எசென்ஸ் சில துளிகள், பச்சை நிறம் சில துளிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால் சுவையான ‘பிஸ்தா ஐஸ்கிரீம்’ தயார்!

வாழைப்பழ ஐஸ்கிரீம்:
நான்கு பழுத்த வாழைப்பழங்களை உரித்து, ஏலப்பொடி சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள். அத்துடன் சில துளிகள் வாழைப்பழ எசென்சும், சில துளிகள் ஐஸ்கிரீம் எசென்சும் கலந்து ‘சாதா ஐஸ்கிரீ’முடன் சேர்த்துத் தயாரித்தால் சுவையான வாழைப்பழ ஐஸ்கிரீம் தயார்.

About The Author