அதிகார பத்திரம் வைததிருப்பவரிடம் இருந்து நிலத்தை வாங்குவது சட்டப்படி சரியா..?

சென்னை பெருங்களத்தூரில் ஒரு வீட்டுமனை வாங்க இருக்கிறேன். அந்த மனையின் உரிமையாளர், வேறொருவருக்கு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்துள்ளார். ‘பவர்’ வைத்துள்ளவர்தான் தற்போது என்னிடம் கிரயம் பேசுகிறார். பவர் வைத்துள்ளவரிடமிருந்து, நிலத்தை வாங்குவது சட்டப்படி சரியா..?

பதில் சொல்கிறார் நிலம் மற்றும் சொத்து ஆலோசகர் ‘ட்ரைஸ்டார்’ ஜார்ஜ் பீட்டர் ராஜ்:

பெரும்பாலும் நில மோசடிகள் அதிகளவில் நடப்பதற்கு இதுபோன்று அதிகார பத்திரம் (பவர் ஆஃப் அட்டர்னி) எழுதிக் கொடுப்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. சொத்தை விற்பனை செய்வதற்கு அதன் உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும். இப்படிப்பட்ட பல பிரச்சினைகளால் நில உரிமையாளர் அலைய முடியாதபோது, தனது சார்பாக பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்யலாம். இதற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகார பத்திரம் பதிவு செய்யவேண்டும். பவர் ஆஃப் அட்டர்னியாக நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் கொடுக்கப்படுகிறது என்ற விபரம் அதில் இருக்கும்.

01.11.2009-லிருந்து அரசாங்கம் பவர் ஆஃப் அட்டர்னி பதிவு செய்வதற்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறது. உங்களுக்கு நிலத்தை விற்பவர் இதற்கு முன்பு பவர் ஆஃப் அட்டர்னியை நியமித்து இருந்தால் கீழ்கண்டவற்றை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டும்:

பொது அதிகாரப் பத்திரம் (ஜெனரல்), தனி அதிகாரப் பத்திரம் (ஸ்பெஷல்) என பவர் ஆஃப் அட்டர்னியில் இரு வகை உண்டு.

பொது அதிகாரப் பத்திரத்தில் பிரதிநிதியாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்றல், நிலமாக இருந்தால் மனைப் பிரிவுகளாகப் பிரித்தல், அரசு அலுவலகங்களில் சொத்து ஆவணங்களில் கையொப்பமிடல் போன்ற அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். இதை தமிழ்நாட்டில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.

தனி அதிகாரப் பத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு மட்டுமே செயல் அதிகாரம் வழங்கப்படும். உதாரணமாக சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் அதிகாரம் உண்டு. இதைத் தவிர வேறு எதையும் அவரால் செய்ய முடியாது.

நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ, அங்குதான் பவர் ஆஃப் அட்டர்னி பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தவிர, சொத்தை வாங்கும்போது பெறப்படும் வில்லங்க சான்றிதழில் (இசி) இந்த விவரங்கள் இருக்காது.

சொத்தின் உரிமையாளருக்கும் அவரால் நியமிக்கப்பட்டவருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னியை ரத்து செய்துவிடுவார். ரத்து செய்யும் நாளிலிருந்து, பவர் ஆஃப் அட்டர்னிக்கும் சொத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.

உதாரணமாக A என்பவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு B என்பவரை 07.07.08 அன்று பவர் ஆஃப் அட்டர்னி ஆக நியமித்து பதிவு செய்கிறார். ஏதோ காரணத்தால் A, 16.08.08 அன்று B-க்குக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னியை ரத்து செய்து விடுகிறார். ஆனால் இதை B வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டு A-யின் சொத்துக்களை C என்பவருக்கு விற்பனை செய்தால் அந்த விற்பனையே செல்லாததாகிவிடும். ஆனால், பவர் பதிவு செய்யப்பட்டதோ, ரத்து செய்யப்பட்டதோ வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறாத காரணத்தினால் நம்மால் அதைக் கண்டு பிடிக்க முடியாது.

நீங்கள் சொத்து வாங்கும்போது, விற்பனை செய்பவர் பவர் ஆஃப் அட்டர்னியாக இருந்தால், அன்றுவரையிலும் அவரது பவர் ரத்து செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் நகல் கேட்டு விண்ணப்பித்து வாங்கிப் பார்க்கலாம். அதில் பவர் ரத்து செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு உரிமையாளர் அல்லது பவர் ஆஃப் அட்டர்னி மூலமே நாம் விண்ணப்பிக்க முடியும்.

***

வாசகர்களுக்கு மேலும் இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேவைப்பட்டால் இந்தப் பக்கத்தின் கீழுள்ள படிவத்தின் மூலம் அவர்கள் தங்களது கேள்விகளை எழுதியனுப்பலாம்.

மேற்கண்ட ஆலோசனையை வழங்கியவர், செ‎ன்னை தி.நகரில் இயங்கிவரும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி. லிட்.(Tristar Housing Pvt. Ltd) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்கள். இந்நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0091-44-2431 2431

Disclaimer : The information in the above article are obtained from sources, which we believe to be reliable. We make no guarantee, representation, or warranty in respect of the information contained herein and accept no liability as to its accuracy or completeness.

About The Author

7 Comments

  1. Kamalmohan

    Bhagapirivinai pattiram vidudhalai pattiram settlement deed Ivaigalukkula vithyasangalai Ariya virumbugiren…

  2. p.karthik

    சார்

    என் தந்தை 1971 ம் வருசம் 37/2 சென்ட் நிலம் வன்கிஉல்லர் அந்த இடதுகு இன்னும் பட்ட வன்க வில்லை என் தந்தை 1988 ல் இரந்து விட்டர் ,என்கலுகு பதியபட இடதில் சம்மந்தம் இலத நபர் பெயரில்பட்ட உல்லது, அதை பயன் படுதி என்கலிடம் ப்ரட்ச்னை செஇகிரர்.எஙல் இடதில் பட்ட அவர்கல் பெயரில் இருந்த அவர்கலுகு உருமை இருகும சார்

  3. swamy

    ணான் ஒருவருக்கு பொட்து அதிகராம் வழங்கியுலேன் .அவர் வழங்கிய அடுத்த் நாலே இன்னொருவருக்கு சேல் அக்க்ரிமென்ட் போட்டு விட்டார் .இன்னொருவர் வீடு என்க்கு சொந்தம் என்கிரார். ப்

  4. Anantha krishnan

    நெ கவெ அ க்ரன்ட் fஅதெர் ப்ரொபெர்ட்ய் நெ அரெ லிகெ டொ ஷரெ தெ ப்ரொபெர்ட்ய் புட் நெ அரெ 5 பெர்சொன் 2 பெர்சொன் டிட்ட் cஒமெ டொ ஷரெ தெ ப்ரொபெர்ட்ய் ந்கட் தெ ப்ரொசுஜெர்ச் டொ ஷரெ ஒஉர் ப்ரொபெர்ட்ய்

  5. பாலாஜி

    பட்டா வாங்க பொது ஆதிகார பத்திரம் மூல ஆவணமாக கொடுத்தல் பட்டா பெயர் மாற்ற முடியுமா

  6. மனோகரன்

    சார் வணக்கம்.. நான் நவம்பர் 2008ல் ஒருவருக்கு பவர் எழுதிக் கொடுத்தேன்.. (கடன் வாங்கியதற்காக) தற்போது கடன் வாங்கிய தொகைக்கும் மேலாக பணம் திருப்பி செலுத்தியும் அவர் மேலும் வட்டியாக பணம் கேட்டு பவர் பத்திரத்தையும் எனது ஒரிஜனல் பத்திரத்தையும் தர மறுக்கிறார்.. பத்திரம் இல்லாமல் பவரை கேன்ஷல் செய்ய முடியுமா..? எனது பத்திரத்தை திருப்பி வாங்க என்ன நடைமுறையைப் பின்பற்றுவது?

Comments are closed.