அனாடமிக் தெரபி (10)-உறுப்புகளின் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல்

கடந்த வாரம், ‘இதயத்தில் ஏற்படும் ஓட்டை‘ உண்மையில் இதய நோய் இல்லை, இரத்தத்தின் நோய் என்பதையும் அதை உடலால் தானாகவே சரி செய்துகொள்ள இயலும் என்பதையும், அப்படிச் சரியாகாததற்குக் காரணங்கள் என்ன என்பவற்றையும் பார்த்தோம். அது இதயத்துக்கு மட்டுமில்லை, எல்லா உறுப்புக்களுக்கும் பொருந்தும்.

உடலில் எந்த உறுப்பிலும் நோய் கிடையாது. இரத்தத்தில்தான் நோய். எனவே, உறுப்புகளில் ஆராய்ச்சி செய்து நேரத்தை விரயம் செய்வதை விட்டுவிட்டு, கடந்த வாரம் கூறப்பட்ட ஐந்து காரணங்களை ஆராய்ச்சி செய்து அவற்றைச் சரி செய்துவிட்டால், நம் நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

அப்படியே அந்த ஐந்து காரணங்களையும் சரி செய்துவிட்டால் கூட இனிமேல் புது நோய் வராது என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், வந்த நோய் குணமாகுமா என்று உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வரலாம். இந்தச் சிகிச்சை வருமுன் காப்போம் சிகிச்சை கிடையாது. வந்த நோய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதைச் சரி செய்யும் சிகிச்சை.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! உங்கள் உள்ளங்கையில் இருக்கும் தோல் நீங்கள் பிறக்கும்பொழுது இருந்ததா? இல்லை புதியதா? நம் உள்ளங்கைகளில் உள்ள தோல் அடிக்கடி உரிந்து புதிதாக மாறுகிறது. இதை நாம் பார்க்கிறோம். அதேபோல் நகம் பழைய நகமா புது நகமா? முடி ஐந்து வருடத்திற்கு முன்னால் இருந்ததா புதியதா? தோல், நகம், முடி அடிக்கடி மாறுகின்றன. அதே போல், நம் உடம்பிலிருக்கும் அனைத்து உறுப்புகளும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. இதைப் பற்றிப் பொதுவாக எந்த மருத்துவரும் அதிகமாகப் பேசுவதில்லை. பாம்பு சட்டை உரித்துப் புதியதாக மாற்றுவது போல நம் உடல் உறுப்புகள் அனைத்தும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

நம் குடல் 36 மணி நேரத்திற்கு ஒரு முறை மொத்தமாகப் புதியதாக மாறுகிறது. உங்களுக்கு இப்போது இருக்கும் குடல் இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்த குடலே கிடையாது. இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் 13 நாட்களில் தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் 120 நாட்களில் தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. கல்லீரல் ஒரு வருடத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இதே போல் தலை முடி முதல் கால் நகம் வரை உடலில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் சராசரியாக ஒரு வருடத்திற்குள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றன. ஆக மொத்தம், நம் உடலில் இருக்கும் உறுப்புகள் புது உறுப்புகளே!

ஒரு நிமிடத்தில் நம் உடலில் 300 கோடி செல்கள் தாமாகவே புதுப்பித்துக் கொள்கின்றன. கையில் தேய்த்தால் அழுக்கு போல் கருப்பாக ஒரு பொருள் வரும். இது அழுக்கு அல்ல, செத்துப்போன செல்கள் வேர்வை வழியாக வெளியே வருகின்றன. மலம் மஞ்சளாகப் போவதற்குக் காரணம் செத்துப் போன செல்களின் நிறம் மஞ்சள். மலம், மூத்திரம், வேர்வை, சளி வழியாகச் செத்துப்போன செல்கள் உடலை விட்டு வெளியேறுகின்றன. இப்படி ஒரு நிமிடத்தில் 300 கோடி செல்கள் உடலை விட்டு வெளியே சென்று, உடல் உறுப்புக்கள் தம்மை தாமே புதுப்பித்துக் கொள்கின்றன. எப்பொழுது உங்கள் நோய் ஒரு வருடத்திற்கு மேலாகக் குணமாகவில்லையோ அது உறுப்பு சம்பந்தப்பட்ட நோய் அல்ல, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்.

எனவே, நமது உடல் உறுப்புகளில் எந்த உறுப்பு எவ்வளவு பாதித்திருந்தாலும் அந்த உறுப்பை எந்த ஒரு மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை, மருத்துவர் இல்லாமலே தன்னைத் தானே புதுப்பிக்கும் வழிமுறையைப் பயன்படுத்தி நாம் நம் உறுப்புகளைப் புதுப்பித்து நோய்களைக் குணப்படுத்தி கொள்ளலாம். உறுப்புகளையே புதுப்பிக்கும் வித்தை தெரியும்பொழுது உறுப்புகளுக்கு வரும் நோய்களுக்குப் பெயர் வைப்பது தேவையா? உலக மருத்துவர்கள் நோய்களுக்குப் பெயர் வைக்கிறார்கள். ஆனால், குணப்படுத்துவதில்லை. நமது சிகிச்சையில் நோய்களுக்குப் பெயர் கிடையாது. ஆனால், எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்.

சரி, இந்த ஐந்து விஷயங்களையும் ஒழுங்குபடுத்துவது மூலமாக நமது உடலின் செல்களைப் புதுப்பித்து, எல்லா உறுப்புகளையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் இறப்பு வராதா என்ற கேள்வி மனதில் தோன்றும். நமது சிகிச்சை 120 வயது வரைதான் செல்லுபடியாகும். ஒவ்வோர் உயிருக்கும் ஒரு வயது வரம்பு உண்டு. நாய், குரங்கு, பறவை என ஒவ்வோர் உயிரும் ஒரு குறிப்பிட்ட நாள் வரை உயிரோடு இருக்கும். ஆமைக்கு அதிக வருடம் உயிர் வாழ இயற்கை சில வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. நாய் குறுகிய காலத்தில் இறந்து விடுகிறது. அதாவது, உயிர்களின் உடலில் உள்ள ஒரு செல் ஒரு குறிப்பிட்ட நாள் வரை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் 120 வயது வரை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். எனவே, இந்தச் சிகிச்சையை 120 வயது வரை நாம் பயன்படுத்தலாம்.

எனவே, ‘எனக்கு வயதாகிவிட்டது’ என்று யாரும் ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்! இந்தச் சிகிச்சை மூலமாக, கண்டிப்பாக வயதானவர்களுக்கும் உறுப்புகளைப் புதுப்பித்து நோய்களைக் குணப்படுத்த முடியும். இந்த ஐந்து விஷயங்களைச் சரி செய்வதன் மூலமாக நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்த முடியும். எனவே, இந்தச் சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனிச் சிகிச்சை கிடையாது. இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரே நேரத்தில் குணப்படுத்த முடியும். வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author