அனாடமிக் தெரபி (2)

தும்மல்:

தும்மல் என்றால் என்ன? அது எப்பொழுது வருகிறது? யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப் பாருங்கள்! ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுகள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும். சாலையில் நடக்கும்பொழுது யாராவது சாலையைப் பெருக்கிக் கொண்டிருந்தால் அதில் எழும் தூசியால் தும்மல் வரும். சூடாகச் சாப்பிடும்பொழுது தும்மல் வரும். காரமாகச் சாப்பிடும்பொழுது வரும். அல்லது, வீட்டில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது வரும்.

ஆக, தும்மல் என்றால் என்ன? மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் தூசுகள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல், நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து. எனவே, இவற்றை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்கிற ஹிஸ்டமைன் சுரப்பியிடம் அந்த வேலையைக் கொடுப்பார். தும்மல் சுரப்பு நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்யும். இங்கே நாற்பது தூசுகள் உள்ளன. எனவே, ஒரு நாலு தும்மல் மூலமாக இவற்றை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்குத் தேவையான சக்தியை உடலிலிருந்து பெற்று, தேவையான அளவு காற்று எடுத்து, தும்மல் வரவைக்கும். தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வரும். எனவே, நமக்குத் தெரியாமல், நம்மையும் மீறி உடலிலிருந்து தேவையான நீரை உறிஞ்சி, காற்றுடன் தண்ணீரைக் கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் அற்புதமான ஒரு கழிவு நீக்க வேலைதான் தும்மல்.

தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறித் திடீரென வருகிறது. எனவே, தும்மல் என்பது நோய் கிடையாது. நம் உடல் பார்க்கும் வைத்தியம்! ஆனால், நாம் தும்மல் வரும்பொழுது அதை அடக்க நினைக்கிறோம். சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ இருக்கும்பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படித் தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்குப் பெயர்தான் நோய். சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்குத் தைலம் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவத்தைச் செய்யும் சுரப்பியை வேலை செய்யாமல் தடுப்பது நமது உடலுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

இப்படி, தைலத்தின் வாசம் இருக்கும் வரை நமக்குத் தும்மல் வராது. நாம் நினைத்துக்கொள்கிறோம் தும்மலைக் குணப்படுத்திவிட்டோம் என்று. கண்டிப்பாகக் கிடையாது! நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்திவிட்டீர்கள். சுமார் நான்கு ஐந்து மணி நேரத்திற்கு இந்தத் தைலத்தின் வாசம் இருக்கும் வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கெனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில், தும்மல் சுரப்பி சுரக்காவிட்டால், இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும். எனவே, தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அல்லது, முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.

இப்படி, காற்றைச் சுத்தம் செய்வதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர, தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது! தும்மல் வந்தால் நன்றாகத் தும்ம வேண்டும்! இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்குக் கெடுதல்.

மூக்கு ஒழுகுதல்:

இப்படி, தும்மல் வரும்பொழுது ஏதாவது ஒரு வேலையைச் செய்து அதை நிறுத்தினால் பல மணிநேரங்களுக்குத் தும்மல் வராது. ஆனால், இந்தப் பல மணிநேரத்தில் காற்றில் உள்ள பல தூசுகளும் நுரையீலுக்குச் சென்று, நாற்பதாக இருந்த தூசுகள் எண்ணிக்கை இப்பொழுது நாலாயிரமாக அதிகரித்திருக்கும். தைலத்தின் வாசம் தீர்ந்தவுடன் மீண்டும் தும்மல் சுரப்பு வந்து பார்க்கும். ஏற்கெனவே நாற்பது தூசு இருக்கும்பொழுது நான்கு தும்மல் தேவைப்பட்டது. இப்பொழுது நாலாயிரம் தூசு இருக்கும்பொழுது நாற்பது தும்மல் தேவைப்படும். எனவே, தும்மல் சுரப்பி பயந்து "என்னால் முடியாது சாமி!" என்று ஓடிவிடும். நமது உடலில் உள்ள மருத்துவர் இப்பொழுது தும்மல் சுரப்பியைவிடச் சக்தி வாய்ந்த மூக்கு ஒழுகும் சுரப்பியை அழைத்துச் சிகிச்சை செய்யச் சொல்வார். தும்மல் என்பது நாம் வீட்டைத் துடைப்பம் கொண்டு பெருக்குவது போல. மூக்கு ஒழுகுவது என்பது தண்ணீர் ஊற்றிக் கழுவுவது போல. இப்பொழுது நுரையீரலில் உள்ள அந்தத் தூசுகளைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி மூக்கு வழியாக வெளியே தள்ளுகிறது. எனவே, மூக்கில் நீர் வழிதல் என்பதும் நோய் கிடையாது. ஆனால், நாம் மூக்கு வழியாக நீர் வரும்பொழுது என்ன செய்கிறோம்? மீண்டும் மீண்டும் உறிந்து கொண்டு இருக்கிறோம். இப்படி எப்போதெல்லாம் மூக்கு உறிகிறீர்களோ அப்போதெல்லாம் நம் உடலுக்குத் துரோகம் செய்கிறோம். எனவே, மூக்கில் நீர் வழியும்பொழுது நன்றாக அதைச் சிந்த வேண்டும். இப்படிச் சிந்தி விட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கொண்டு எந்த நோயும் வராது.

சளி:

மூக்கு ஒழுகும்பொழுது அதை நிறுத்துவதற்குத் தைலம், மருந்து, மாத்திரை அல்லது ஏதாவது ஒரு வித்தை செய்து அதை நிறுத்தினால் என்ன அர்த்தம்? நம் கழிவுகளை நாம் உள்ளேயே வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம் என்று அர்த்தம். இப்படி, மூக்கு ஒழுகுவதை நிறுத்த மருத்துவம் செய்தால் நாலாயிரம் தூசும் சில நாட்களுக்குப் பிறகு நாலு லட்சம் தூசாக மாறும். இப்படித் தூசுகள் அதிகரித்தவுடன் மீண்டும் நம் உடலில் இருக்கும் மருத்துவர் சளிச் சுரப்பியை அழைத்து நோயைக் குணப்படுத்தக் கூறுவார். சளி என்பது நமது வீட்டில், தரையில் கறை அதிகமாக இருந்தால் சோப்புப் பௌடர் போட்டுக் கழுவுவதுபோல. நுரையீரலில் இருக்கும் நான்கு இலட்சம் தூசுகளை, கெட்டியாக ஒட்டியிருக்கும் அவற்றைச் சளி என்கிற சோப்புப் பௌடர் போட்டு நன்றாகக் கழுவி மூக்கின் வழியாக வெளியே தள்ளுகிறது. நாம் சளி வரும்போழுதும் உறிஞ்சி உறிஞ்சி அதை உள்ளே தள்ளவே முயற்சி செய்கிறோம். சளி என்பதும் நோய் கிடையாது. அதுவும் நம் உடல் பார்க்கும் வைத்தியமே. சளிக்கு உலகத்தில் ஒரே ஒரு வைத்தியம் என்னவென்றால் நன்றாகச் சிந்த வேண்டும். இதை விட்டுவிட்டுச் சளியை உள்ளே வைப்பதற்கு ஏதாவது ஒரு வைத்தியத்தை நீங்கள் பார்த்தால் அந்த வைத்தியத்திற்குப் பெயர்தான் நோய்!

ஆனால், நாம் குழந்தைகளுக்கும் நமக்கும் சளி வந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். யாராவது மலம் வருகிறது என்று உங்கள் மருத்துவரிடம் சென்று “ஐயா எனக்கு மலம் வருகிறது. அதை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள்” என்று கேட்பீர்களா? “எனக்கு மூத்திரம் வந்து கொண்டே இருக்கிறது அதை நிறுத்தவேண்டும்” என்ற கேட்பீர்களா? மலம், மூத்திரத்தைப் போலச் சளி என்பதும் வெளியே செல்ல வேண்டிய ஒரு கழிவுப்பொருள். எனவே, சளி வரும்பொழுது தயவுசெய்து நன்றாகச் சிந்துங்கள்! இதைத் தவிர சளிக்கு உலகில் சிகிச்சை கிடையாது.

நெஞ்சுச் சளி:

இப்படிச் சளியை உள்ளே வைத்திருக்க ஏதாவது மருந்து, மாத்திரை அல்லது உங்களுக்குத் தெரிந்த பிற வித்தைகளைச் செய்தால், இந்தச் சளி நுரையீரலில் தங்கி, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு நெஞ்சுச் சளியாக மாறுகிறது.

இருமல்:

நெஞ்சுச் சளி அதிகரிக்கும்பொழுது அதை வெளியே தள்ளுவதற்காக இருமல் வருகிறது. ஒரு சாதாரணத் தும்மல் வரும்பொழுது அதை அடக்கி, அது முற்றிப்போய் இப்பொழுது நெஞ்சுச் சளியாக, இருமலாக மாறிவிட்டது என்பது நமக்குப் புரியவில்லை.

ஆஸ்துமா:

நெஞ்சுச் சளி அதிகரிக்கும்பொழுது, அது நாட்பட்ட நோயாக மாறும்பொழுது அதை ஆஸ்துமா என்ற அழைக்கிறார்கள்.

வீசிங் / மூச்சிரைப்பு:

இப்படி, நுரையிரலில் உள்ள கழிவுப்பொருட்களை அது வெளியே தூக்கி வீசும்பொழுது அதை நாம் தடுப்பதால், கழிவுகள் ஒன்று சேர்ந்து நாம் மூச்சு விடும் பாதையும், நுரையீரலின் சக்தியும் குறைந்து மூச்சு விடச் சிரமமாக இருக்கிறது. இதற்கு வீசிங் (மூச்சிரைப்பு) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

எலும்புருக்கி நோய் (T.B):

இப்படி ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு, இந்தக் கழிவுப்பொருட்களை உடலில் அடக்கி வைப்பதால் எலும்புருக்கி நோய் (T.B) வருகிறது.

புற்று நோய்:

எலும்புருக்கி நோய்க்கு மருத்துவம் செய்து அதைக் குணப்படுத்தாமல் பல ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது என்றால், தும்மலுக்கு வைத்தியம் பார்த்தால் மூக்கு ஒழுகும் நோய் வரும். மூக்கு ஒழுகும் நோய்க்கு வைத்தியம் பார்த்தால் சளி பிடிக்கும். சளிக்கு வைத்தியம் பார்த்தால் நெஞ்சுச் சளி வரும். நெஞ்சுச் சளிக்கு வைத்தியம் பார்த்தால் இருமல் வரும். இருமலுக்கு வைத்தியம் பார்த்தால் மூச்சிரைப்பு வரும். மூச்சிரைப்புக்கு வைத்தியம் பார்த்தால் ஆஸ்துமா வரும். ஆஸ்துமாவுக்கு வைத்தியம் பார்த்தால் எலும்புருக்கி வரும். அதற்கு வைத்தியம் பார்த்தால் புற்று நோய் வரும். ஆனால், புற்று நோய் வந்தபிறகு அதற்குக் காரணம் தெரியவில்லை; குணப்படுத்த முடியாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில், உடல் கழிவை வெளியே தூக்கி வீசும்பொழுது அதற்கு ஒரு நோய் என்று பெயர் வைத்து அந்த நோயைக் குணப்படுத்துவற்கு வைத்தியம் செய்வதுதான் இதற்குக் காரணம்.

எனவே, இவை எதுவும் நோயே கிடையாது! உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு முயற்சியைச் செய்யுமே தவிர, நோயை உண்டு பண்ணுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாது. எனவே, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி இவை மூன்றும் வரும்பொழுதே இவற்றை வெளியேற்றிவிட்டால், அதன் பிறகு வரும் கொடுமையான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். எனவே, இன்று முதல் கூச்சப்படாமல், மூக்கில் எப்பொழுது கழிவு வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். உள்ளே வைத்துக்கொள்வதற்கு எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது! இன்றிலிருந்து ஆரம்பித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த கழிவுகள் வெளியே வந்து உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்!

— சிகிச்சை தொடரும்…

*********

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

About The Author