அனாடமிக் தெரபி (24)-சுகர் – ப்ரீ (Sugar Free) சாப்பிடலாமா?

உணவில் சர்க்கரை இருக்கிறது என்பதற்காகத்தான் நாம் உணவைச் சாப்பிடுகிறோம். நமது உடலுக்குச் சர்க்கரை தேவை என்பதால்தான் சாப்பிடுகிறோமே தவிர, வேறு ஒரு காரணமும் இல்லை. சுகர் ப்ரீ என்பது குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு பொருள். எப்பொழுது ஒரு உணவில் கார்போஹைட்ரேட் என்ற சர்க்கரை இல்லையோ, அது உடலுக்குத் தேவையே கிடையாது. எனவே, தயவு செய்து, சுகர் ப்ரீ என்ற பெயரில் எதையுமே சாப்பிடாதீர்கள்! சர்க்கரை என்றால் என்ன, செல்கள் என்றால் என்ன, உடல் எவ்வாறு இயங்குகிறது என்பவை தெரியாதவர்கள், புரியாதவர்கள் பேசும் பேச்சு அது. ஒரு உணவில் சர்க்கரை இருந்தால் மட்டும்தான் அது உணவு. சர்க்கரை இல்லாத எந்தவொரு பொருளும் உணவே கிடையாது.

"அரிசிச் சாதம் சாப்பிடாதீர்கள்; அதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. சப்பாத்தி சாப்பிடுங்கள்" என்று கூறுகிறார்கள். அரிசிச் சாதத்திலும் சர்க்கரைதான் உள்ளது, சப்பாத்தியிலும் சர்க்கரைதான் உள்ளது. சரி, வட இந்தியாவில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே, அவர்களுக்கு ஏன் சர்க்கரை நோய் வருகிறது? வட இந்தியாவில் போய்ப் பாருங்கள்! "சப்பாத்தி அதிகம் சாப்பிடாதீர்கள்! அதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அரிசி உணவு எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள். அனைத்து உணவுகளிலும் சர்க்கரைதான் இருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் சர்க்கரையாகத்தான் மாறும். இனிப்புக்கும், சர்க்கரைக்கும் சம்பந்தமே கிடையாது. இதைப் புரிந்து கொண்டால் சர்க்கரை நோயாளிகள் இந்த நிமிடம் முதல் இனிப்பு சாப்பிடலாம்.
இட்லி என்பது சர்க்கரை. சப்பாத்தியில் சர்க்கரை உள்ளது. உருளைக்கிழங்கு போண்டாவில் சர்க்கரை உள்ளது. இட்லி இனிக்கிறதா? சப்பாத்தி, உருளைக்கிழங்கு போண்டா இனிக்கிறதா? இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? சர்க்கரை இனிக்காது. இனிப்பு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருள். இது நாக்கால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரையென்பது கண்ணுக்குத் தெரியும் பொருள். இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை இனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, தயவு செய்து இனிப்புகளைப் பார்த்து பயப்படாதீர்கள்!

நமது சிகிச்சையில், ஒரு உணவை எப்படிச் சாப்பிட்டால் அதை நல்ல சர்க்கரையாக மாற்ற முடியுமென்ற வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதைக் கற்றுக்கொண்டு இந்த நிமிடம் முதல் எல்லா உணவுகளையும் நாம் கூறிய முறையில் சாப்பிட்டு, நல்ல சர்க்கரையாக மாற்றி அனுப்பும்பொழுது இயற்கையாகவே நமது கணையம் இன்சுலின் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. இயற்கையாகவே இன்சுலின் சுரப்பதற்கு வழி இருக்கும்போது இனி ஏன் நாம் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்?
நாம் சொல்லுவது சில பேருக்குப் பயம் ஏற்படுத்தும்; இவர் பேச்சைக் கேட்டு நாம் சர்க்கரை மருந்து, மாத்திரையை நிறுத்திவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்படுமோ என்று. ஒன்று செய்யுங்கள்! நாம் சொல்லும் சில வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் ஒரு மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள்! நாம் சொல்லும் பிரகாரம் சாப்பிடுங்கள். இன்சுலின், மருந்து, மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டாம்! ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருங்கள்! காலையில் சாப்பிட்ட பின் இன்சுலின், மருந்து, மாத்திரை எதுவும் போட்டுக் கொள்ளாமலே மதியம் மீண்டும் பசி எடுத்தாலே என்ன அர்த்தம்? உங்கள் கணையம் இன்சுலின் சுரந்து விட்டது என்று அர்த்தம்! நாம் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரத்தில் அல்லது மூன்று மணி நேரத்தில் இன்சுலின் சுரக்க வேண்டும். இல்லையென்றால் மயக்கம் வந்து விடும். எப்பொழுது நமது முறைப்படி சாப்பிட்டு ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு மயக்கமே வரவில்லையோ உங்களுக்குக் கணையம் கெட்டுப் போகவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

சில சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையம் கெட்டுப் போவதாலும் சர்க்கரை நோய் வருகிறது. ஆனால், அது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான். எனவே, நமது முறைப்படி சாப்பிடுங்கள். ஒரு நாள் முழுவதும் மயக்கம் வரவில்லையென்றால் உங்களுக்குக் கணையம் கெட்டுப் போனதால் வந்த சர்க்கரை நோய் கிடையாது, ஜீரணம் கெட்டுப் போவதால் வந்த சர்க்கரை நோய்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இது உறுதியானதும் உங்கள் மருந்து மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்து ஒரு மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் மொத்தமாக அவற்றை நிறுத்தி விட்டு சந்தோஷமாக, சௌக்கியமாக இருங்கள்!

ஆக, மீண்டும் மீண்டும் நாம் சொல்வது, சாக்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயில்லை. ஜீரணம் சம்பந்தப்பட்ட நோய். உணவை எப்படிச் சாப்பிட்டால் அது நல்ல சர்க்கரையாக மாறும் என்பதை நாம் பார்க்கப் போகிறோம்! அதன் மூலமாகச் சர்க்கரை நோய் இல்லாத உலகத்தையும் நாம் கூடிய விரைவில் பார்க்கப் போகிறோம்!

கைதுறப்பு (Disclaimer):
இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author