அனாடமிக் தெரபி (28)

சிலர் எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படுவார்கள். எண்ணெய் என்பது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு பொருள். அதில் பயப்பட என்ன இருக்கிறது?

எண்ணெய் நாம் ஏன் சேர்த்துக் கொள்கிறோம் என்றால் நமது உடலுக்குக் கொழுப்பு தேவை; அதற்காக. எனவே, தயவு செய்து எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு சாதாரண எண்ணெயைக் கூட ஜீரணம் செய்வதற்கு நமக்கு முடியவில்லை என்பதுதான் பிரச்சினையே தவிர, எண்ணெய்ப் பலகாரத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக அவற்றை மாற்றலாம் என்பதை இந்தத் தொடரில் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். எனவே, இனிமேல் எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நாம் குணப்படுத்தலாம்.

எள் எண்ணெய்

நல்லெண்ணெய் என்ற பெயரில் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் எந்த எண்ணெயும் உண்மையில் நல்ல எண்ணெய் கிடையாது. நல்லெண்ணெய் என்பதற்கு எள் எண்ணெய் என்று பொருள். கருப்பு எள் வாங்கி நீங்களே எண்ணெய் ஆட்டும் செக்கில் கொண்டு போய்க் கொடுத்து அரைத்து, அந்த எண்ணெயைச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு எது நல்ல எண்ணெய் என்பது தெரியும். நம்மில் பல பேருக்கு ஒரிஜினல் எள் எண்ணெய் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். இதைப் பற்றி விளக்கமாகக் கூறுவார்கள். தயவு செய்து கடையில் விற்கும் எந்த எண்ணெயையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள்! குறிப்பாக, கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெய் என்று பந்தாவாக விளம்பரம் செய்யும் எந்த எண்ணெயையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள்! ஏனென்றால், நாம் எண்ணெய் சாப்பிடுவதற்குக் காரணமே அதில் உள்ள கொழுப்புக்காகத்தான், கொழுப்பு இல்லாத எண்ணெய் குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு பொருள்.

நீங்கள் ஒரிஜினல் எள் எண்ணெய்க்கு எங்கு சென்றாலும் கண்டிப்பாக ஏமாற்றம்தான் கிடைக்கும். 20 கிலோ கருப்பு எள் வாங்கி வந்து வெயிலில் காய வைத்து, கற்களை அகற்றி, அதனுடன் 1 கிலோ பனங்கருப்பட்டி சேர்த்து அருகில் உள்ள எண்ணெய் ஆட்டும் கடையில் கொண்டு போய்க் கொடுத்தால் உங்கள் கண் முன்னாலேயே அரைமணி நேரத்தில் எள் எண்ணெயாக மாற்றிக் கொடுப்பார்கள். அதை 1 நாள் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள கழிவுப் பொருட்கள் கீழே தங்கி விடும். இப்பொழுது சுத்தமான ஒரிஜினல் எள் எண்ணெய் தயார். இப்படி உங்கள் வீட்டிற்குத் தேவையான எள் எண்ணெயை நீங்களே தயார் செய்து வைத்துக் கொண்டால் நம் உடலில் ஆரோக்கியம் என்றுமே இருக்கும்.

இனிமேல் இப்படிச் சொந்தமாகத் தயாரித்த எள் எண்ணெயையே பயன்படுத்துங்கள்! ஒரிஜினல் எள் எண்ணெய் என்று யார் கொடுத்தாலும் வாங்காதீர்கள். நீங்களே செய்தால் மட்டுமே அது உண்மை.
நமது முன்னோர்கள் அனைவரும் எள் எண்ணெயைச் சாப்பிட்டதால் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக, திடமாக வாழ்ந்தார்கள்.

முன்பே கூறியது போல், நமது சிகிச்சையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் சாப்பிட்டே, குறிப்பாக தேங்காய் மற்றும் எண்ணெய்ப் பலகாரத்தைச் சாப்பிடுவதாலேயே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். முறையாக இவற்றைச் சாப்பிடுவதன் மூலமாக, இவற்றிலுள்ள கொழுப்புச் சத்தை நல்ல கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்யும்பொழுது கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிகிறது. நல்ல கொழுப்பு அதிகமாக இரத்தத்தில் கலந்தால் கெட்ட கொழுப்பு தானாக வெளியே வரும். நமது சிகிச்சை முறைப்படி ஒன்று அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் உங்கள் கொழுப்பு சம்பந்தப்பட்ட டெஸ்டுகளை எடுத்துப் பாருங்கள்! கெட்ட கொழுப்பு குறைந்துள்ளதைக் கண்டுபிடித்து சந்தோஷமாக வாழுங்கள்.

வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author