அனாடமிக் தெரபி (43)

சுவை மருத்துவம் – கசப்பு, துவர்ப்பு சிகிச்சை

கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அவற்றை நெருப்புப் பிராணனாக (சக்தி) மாற்றி உடல் முழுவதும் அனுப்பி வைக்கின்றன.

நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இதயம், இதயத்தின் மேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு ஆகியவை. இதற்கான வெளி உறுப்பு நாக்கு. இதற்கான உணர்ச்சி மகிழ்ச்சி.

நம்மில் பலருக்குத் திடீரென மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே நெஞ்சு படபடக்கும்; வியர்வை வரும். இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி உடலிலுள்ள நெருப்பு சக்தியைச் சாப்பிட்டு விடுகிறது. உடலில் நெருப்பு சக்தி குறைவதால் இதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காமல் அது படபடக்க ஆரம்பிக்கிறது.

திடீரென நம்மை யாராவது மேடையில் ஏறிப் பேசச் சொன்னாலோ, அனைவர் மத்தியிலும் நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும்பொழுதோ, பள்ளிகளில் கல்லூரிகளில் திடீரென மேடை ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்தப் படபடப்பு ஏற்படும். ஆக, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

நாக்கும் இதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும். இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும்.

இக்காலத்தில் நம்மில் பலருக்குத் துணிவு கிடையாது. நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம். பல விஷயங்களில் நாம் துணிந்து எந்த வேலையும் செய்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்ளாததுதான். கசப்பான பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் துணிவுடையவர்களாக இருப்பதைப் பாருங்கள்!

இன்றைய குழந்தைகள் கோழைத்தனமாக இருக்கிறார்கள். யாருக்கும் துணிச்சல் இல்லை. காரணம், குழந்தைகள் யாரும் கசப்பு, துவர்ப்புச் சாப்பிடுவதே கிடையாது.

எனவே, நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான, துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் முலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

பாம்பு கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவும். உடலிலுள்ள அனைத்து செல்களும் பாம்பு விஷத்தை வெளியேற்றுவதற்காக இதயத்திடம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் சொல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்பொழுது உடலிலுள்ள நெருப்பு சக்தி குறையும். எப்பொழுது நெருப்பு சக்தி குறைகிறதோ நாக்கு என்ற மருத்துவர் கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளைக் கேட்பார்.

பாம்பு கடித்தால் கொடுக்கும் மூலிகைகளின் பெயர் சிறியா நங்கை, பெரியா நங்கை. இந்த மூலிகைகள் மிகவும் கசப்பாக இருக்கும். அவற்றில் மருந்து இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றிலுள்ள கசப்புச் சுவையே நாக்குக்கு நெருப்பு சக்தி கொடுத்து, அதை இதயத்திற்குக் கடத்துவதன் மூலமாக இதயத்தை நன்றாக வேலை செய்ய வைத்து, உடலிலுள்ள விஷத்தை வெளியேற்றப் போதுமானவை.

எனவே, யாருக்காவது பாம்பு கடித்தால், சிறியாநங்கை, பெரியாநங்கை போன்ற மூலிகைகளோ இன்ன பிற விஷ முறிவு மருந்துகளோ அருகில் இல்லாவிட்டால், பாகற்காய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுங்கள். பாம்பின் விஷம் உடலில் இருக்கும்பொழுது பாகற்காய் சாப்பிட்டால் கசக்காது. பாகற்காயும், வேப்பிலையையும் நிறையச் சாப்பிட வேண்டும். எப்பொழுது நாக்கில் கசப்புத் தெரிகிறதோ, மகிழுங்கள்; உடலில் உள்ள விஷம் வெளியேறி விட்டது என்று.
நாக்குக்குத் தெரியும் எப்பொழுது எந்தச் சுவை வேண்டுமென்று. விஷம் வெளியேறிய பிறகு கசப்புச் சுவையின் தேவை தீர்ந்து விடவே பாகற்காய் கசக்க ஆரம்பிக்கிறது. எனவே, பாம்பு கடித்தால் முதலில் நமக்குத் தேவைப்படுவது தைரியம். இரண்டாவது, கசப்பு.

பாம்பு விஷத்தால் இறப்பவர்களை விட, பாம்பு கடித்துவிட்டதே என்கிற பயத்தால் இறப்பவர்களே உலகில் அதிகம். பாம்பு கடித்து விட்டது என்ற எண்ணம் மனதில் பயத்தை ஏற்படுத்தி, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீரகம் வேலையை நிறுத்தி விட்டால், அதன் பின் விஷத்தை வெளியேற்ற முடியாது. ஏனென்றால், பாம்பின் விஷத்தை வெளியேற்றுவது சிறுநீரகம்.
எனவே, பாம்பு மட்டுமில்லை, எந்த விஷப்பூச்சி கடித்தாலும் முதலில் நாம், நம் உடல் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்! அப்பொழுதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஒருவருக்குத் தோட்டத்தில் வேலை செய்யும்பொழுது பாம்பு கடித்து விட்டது. அவர் அதைப் பார்க்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் காலைப் பார்த்து, "பாம்பு கடித்தது போல் இருக்கிறதே" என்று கேட்டார். அதைப் பார்த்தவுடன் அவரும், ‘ஆமாம்! இது பாம்பு கடித்த தடயம் போல் இருக்கிறதே’ என்று நினைத்து, உடனே மயங்கிக் கீழே விழுந்து இறந்து விட்டார்! இது போல நிறையக் கதைகள் உள்ளன. பாம்பு கடித்த விஷம் அவரைக் கொல்லவில்லை. பாம்பு கடித்து விட்டது என்று அவருக்கு எப்பொழுது புரிந்ததோ அவர் மனம் பயத்தை உண்டு செய்து, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீரகம் வேலையை நிறுத்தியதும் உயிர் பிரிந்து விட்டது.

எந்த விஷப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அதை உடனே தாராளமாகக் கொடுப்பதும், அதன் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதும்தான்.

அதற்காகப் பாம்பு கடித்தவுடன் வேப்பிலையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம்! இது ஒரு தற்காப்பு வைத்தியம் மட்டுமே! மனதில் தீர்க்கமான துணிச்சலுடன் கசப்பைச் சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷத்தை முறியடிக்கலாம். இருந்தாலும், பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கும் செல்லுங்கள்! ஏனென்றால், சில பாம்புகளின் விஷம் இந்தக் கசப்புக்கும் மீறி வேலை செய்ய வாய்ப்புள்ளது.

கோவில்களில் திருவிழாவின்போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் முழு எலுமிச்சம்பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள். வேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். ஏன் அவ்வாறு சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் உடலுக்குக் காயம் ஏற்படும்பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும். நெருப்புச் சக்தி மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நாக்கு கசப்பைக் கேட்கிறது. எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும்பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

அதே நபர்கள் அடுத்த நாள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள். அவருக்கு அது கசக்கும்!

எனவே, கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொடர்புகளைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருந்துவர்கள்தான் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து காலத்துக்கும் மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author