அவரைக்காய்ப் பொரியல்

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் – ¼ கிலோ (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு – 1 கோப்பை (வேக வைத்தது)
வெங்காயம் – 1
மிளகாய் வற்றல் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடுகு போட்டுத் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள்.

பின்பு, அத்துடன் வெந்த அவரைக்காய், வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலை தூவி இறக்கி விடுங்கள்.(தேவைப்பட்டால் சிறிது உப்புச் சேர்த்துக் கொள்ளவும்)

அவ்வளவுதான், சுவையான அவரைக்காய்ப் பொரியல் தயார்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author