ஆன்மிகத் துளிகள்

கடலில் வாழ்கிற பறவை ஒன்று. அதற்கு மற்ற கடற்பறவைகளோடு மீன்களைப் பிடித்துத் தின்று, இளைப்பாறி, உறங்கி, இனப்பெருக்கம் செய்து வாழ்க்கை நடத்துவது் பிடிக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இதுதான் வாழ்க்கையா என்கிற கேள்வி அந்தப்பறவையின் இதயத்தைத் துளைத்தெடுக்க, தினமும் சிந்தித்து ஒரு நாள் ஒரு முடிவுக்கு வருகிறது. "எந்த ஒரு குறிக்கோளும் சாதனையும் இல்லாத வாழ்வு வாழ்ந்து மடியக்கூடாது".

தன் இனத்தின் மற்ற பறவைகளை விட்டு உயரப் பறப்பதற்கான முடிவை எடுத்து உயர உயரப் பறக்க முயற்சிக்கிறது.

இது Richard Bach எழுதிய Jonathan Livingston Seagull என்கிற புத்தகத்தின் சுருக்கம்தான். புத்தகம் முழுவதும் அந்தப் பறவை உயர் நிலையை அடைவதற்காக எடுத்துக்கொள்ளும் போராட்டத்தைப் பற்றி விவரிக்கிறது.

(நன்றி : விசையும் திசையும் – ஜோ அருண், சே, ச)

*****

புனித விவிலியத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கேட்போமே!

"நீ பலிபீடத்திடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்னிடத்தில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கு நினைவு கூறுவாயானால் அங்கே தானே, பலிபீடத்தின் பின் உன் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகிப் பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து."
(புதிய ஏற்பாடு – மத்தேயு – 5:16)

*****

நல்ல விஷயங்கள் நான்கு

இந்த நான்கு நல்ல விஷயங்களை மட்டும் கடைப்பிடித்தால் எல்லா தீய குணங்கலிலிருந்தும் விடுபடலாம் என்று குர் ஆன் கூறுகிறது.

நிதானத்துடன் கூடிய கம்பீரம்
எளிமையான வாழ்க்கை
நல்ல மனமும் நாவடக்கமும்
தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல்

*****

கடவுளைக் கோவிலில்தான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை. மனப்பூர்வமான பக்தி இருந்தால் இருந்த இடத்திலிருந்தே தரிசிக்கலாம்.

ஒரு கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த சொற்பொழிவாளர், "என் சொற்பொழிவு உங்கள் மனதை அவ்வளவு உருகச் செய்து விட்டதா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "இல்லை சுவாமி, நீங்கள் சொன்னதில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார் என்பது மட்டும்தான் காதில் விழுந்தது. அப்படியே அந்த உபதேசம் செய்யும் காட்சியை மனசின் முன்னால் வந்து நிறுத்திக் கொண்டேன். அதுதான் கண்ணீர் வடித்தேன்" என்றார்.

*****

About The Author

1 Comment

Comments are closed.