இயற்கை உலகம் (28)

பாலை நிலத் தாவரங்களும் விலங்குகளும் :

பாலைநிலத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் தண்ணீரைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் மேம்பட்ட வழிமுறைகளைக் கையாளுகின்றன.

சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற சாறு நிறைந்த தாவரங்கள் (succulent plants) தம் தண்டுகளிலும் இலைகளிலும் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளுகின்றன. மற்ற பாலை நிலத் தாவரங்கள் சின்னஞ்சிறு இலைகளைக் கொண்டு தண்ணீர் இழப்பைத் தவிர்க்கின்றன; அத்துடன் இவற்றிலுள்ள முட்கள் விலங்குகளின் மேய்ச்சலிலிருந்து தாவரங்களைக் காப்பாற்றுகின்றன. இவற்றின் வேர்கள் தண்ணீரைப் பெறுவதற்காக 10 மீட்டர் ஆழம் வரையும் செல்லக்கூடியவை.

ஊர்ந்து செல்லும் (reptiles) பாம்பு போன்ற விலங்கினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்வதாலும் சுறுசுறுப்புடன் இயங்க வெப்பம் தேவைப்படுவதாலும் அவை பாலை நிலங்களில் உயிர்வாழக்கூடியவை. கொறிக்கும் சிறு விலங்கினங்கள் (rodents), பறவைகள் போன்ற பிற பாலை நில விலங்குகள் தீவிர வெப்பத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள புதர்கள் மற்றும் பாறைக் குழிவுகள், பொந்துகள் ஆகியவற்றில் தம்மை மறைத்துக் கொள்கின்றன.

அதிக ஆழமற்ற கடல் மற்றும் ஏரிகள் உலர்ந்து போகும்போது உப்புப் பாலை நிலங்கள் உருவாகின்றன. இவ்வகைப் பாலை நிலத்தில் விலங்குகளோ தாவரங்களோ உயிர் வாழ்வதில்லை.

வட துருவ ஆர்க்டிக் (arctic) பகுதியின் உயிரினம்
:

வட துருவத்தின் தட்பவெப்ப நிலை தொடர்ந்து குளிராக இருப்பதில்லை என்பதோடு அதன் நிலப்பரப்பு எப்போதும் பனியால் மூடப்பட்டும் இருப்பதில்லை. குறுகிய காலமே இருக்கும் கோடைப் பருவத்தில் அப்பகுதியின் வெப்ப நிலை 800 முதல் 1000 ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். வட துருவம் குளிர்ந்து இருப்பதற்குக் காரணம் உலர்ந்த பனிக்கட்டிப் படிகங்களை வலிமையான காற்று விரைந்து எடுத்துச் சென்று வீசுவதே ஆகும்.

வடதுருவத்தின் தென்பகுதியில் வளம் மிக்க பள்ளத்தாக்குகளும் புல்வெளிகளும் இருப்பதுடன், கற்பாசி, மரப்பாசிகள் (lichen) போன்ற தாவரங்களும் மற்றும் வடதுருவக் கலைமான்கள் போன்ற விலங்குகளும் உள்ளன. கடுமையான குளிர் இருந்தாலும் வடதுருவத்தில் இளவேனிற்கால மலர்களும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கு ஈக்கள் போன்ற உயிரினங்களும் கூட இருக்கின்றன.

இப்பகுதியின் விலங்களில் மான்வகைகள் (caribou), எருதுகள், மலை ஆடுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் கரடிகள், திமிங்களங்கள், குதிரைகள் போன்ற பலவும் அடங்கும். வடதுருவ ஆர்க்டிக் பகுதியில் 40,000 துருவக் கரடிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது; உணவுப் பற்றாக்குறையால் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

About The Author