இரத்தினச்செவ்வி – ரூசோ

Ruso
நிலாச்சாரலின் ரொமாண்டிக் கவிஞராக விளங்குபவர் ரூசோ. இவருடைய கவிதைகளின் சிறப்பு எளிமையான சொற்கள், யதார்த்தமான கற்பனை, மனதைத் தொடும் கவித்துவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர் ‘மிதவையில் பூத்த மலர்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடிய விரைவில் இரண்டாவது தொகுப்பும் வெளி வர உள்ளது. கவிதைகளுக்கு அப்பால் ரூசோ அவர்கள் உயிரின வாழ்க்கை ஆய்வில் ஆர்வம் கொண்டவர். ‘பசுமையகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனைப் பற்றி கலைஞர், மக்கள் ஆகிய தொலைக்காட்சிகளிலும், பல்வேறு நாளிதழ்களிலும் செய்தி வெளிவந்துள்ளது.

நிலாச்சாரலில் வெளிவந்துள்ள இவருடைய கவிதைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Ruso%20Thainese

நிலாச்சாரலின் இரத்தினச்செவ்வியை சிறப்பித்தமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

1. எந்த வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?

என்னுடைய 14 வயதிலிருந்து..

2. நீங்கள் எழுதிய முதல் கவிதை எது? அது பிரசுரமாயிற்றா?

முதல் கவிதை "பெண்". ஒரு சிற்றிதழில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது.

3. உங்கள் கவிதைகளில் வழியும் காதலுக்கு காரணம் இருக்கிறதா?

இருக்கிறதே…!

4. ஏன் பல கவிஞர்களின் கவிதைகளுக்குத் தூண்டுகோலாக காதல் அமைகிறது?

நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும்.

5. உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?

ஒருவரல்ல.. பலர் பிடிக்கும். வைரமுத்து, அறிவுமதி, பழநி பாரதி, தாமரை, பா.விஜய், தபு சங்கர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

6. இதுவரை நீங்கள் பார்த்த / படித்த / அனுபவித்த காதல்களில் எந்தக் காதல் தங்களை மிகவும் கவர்ந்த்து? ஏன்?

நிறைய உண்டு. என் அனுபவமே சுவாரசியமானதுதான்!

7. உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

காதல்.

8. உங்கள் பார்வையில் காதல் என்றால் என்ன?

பிறவிப்பயன்!

9. ரூசோ கவிதைகளுக்காக காத்திருக்கும் நிலாச்சாரல் வாசகர்களுக்கு நீங்கள் தரப்போகும் அறிக்கை என்ன?

மிக விரைவில் என்னுடைய கவிதைகள் வெளிவரும். காதல் கவிதைகள் மட்டுமின்றி அனைத்து சமூகப் பார்வைகளும் இடம் பெறும்.

10. எப்படிப்பட்ட வாசிப்பு அனுபவம் உங்களுக்குப் பிடிக்கும்?

என் தவறுகளைச் சுட்டி காட்டும் ரசிகனைப் பிடிக்கும்.

11. நிலாச்சாரல் மூலம் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றிருக்கிறீர்கள், அதைப் பார்க்கும்போது உங்கள் உணர்வு எப்படியுள்ளது?

எல்லையில்லா மகிழ்ச்சி.மேலும் எழுத வேண்டும் என்ற உந்துதல், உற்சாகம் கிடைக்கப்பெறுகிறது.

12. இன்னும் வெளிப்படுத்தப்படாத உள்ளுக்குள் மறைந்திருக்கும் திறமை ஏதேனும் உள்ளதா?

புகைப்பட கலைஞனாக விருப்பம். இன்னும் நேரம் வாய்க்கவில்லை.

13. உங்கள் எழுத்துகளுக்கு உற்சாகம் அளிப்பது எது? யார்?

பாராட்டுக்களும், நண்பர்களும்தாம்.

14. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் விருப்பம் உள்ளதா?

முன்பு இல்லை. இப்போது இருக்கிறது.

15. சமீபத்தில் நீங்கள் எழுதிய / ரசித்த ஹைக்கூ..?

கோலம்

சாணி
பூசணிப்பூ
உங்கம்மா
உங்கப்பா
நீ…
(நான் முன்பு எழுதியது)

About The Author